Amitabh Bachchan Injured: ஹைதராபாத் படப்பிடிப்பு தளத்தில் பாலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன்(Amitabh Bachchan) சண்டைக்காட்சியில் நடித்து கொண்டிருந்தபோது, காயம் ஏற்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார்.


பிரபாஸ் நடிப்பில் ப்ராஜெக்ட் கே(Project K) என்ற திரைப்படம் மிகவும் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. மகாநடி படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இந்த படத்தை இயக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். 


பிரபாஸுக்கு ஜோடியாக ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டில் கலக்கி வரும் தீபிகா படுகோனே நடித்து வருகிறார். மேலும், இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிக்கிறார்.  


இந்தநிலையில், ப்ராஜெக்ட் கே திரைப்படத்தின் படப்பிடிப்பானது ஹைதராபத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது. அப்போது பிரமாண்டமாக எடுக்கப்பட்டிருந்த சண்டைக்காட்சியில் ஈடுபட்டிருந்த அமிதாம் பச்சனுக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து, தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்த அமிதாப் பச்சன் விலா எலும்பு உடைந்து விட்டதாகவும், தசை கிழிந்து விட்டதாகவும் தெரிவித்திருந்தார். 


இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “ஹைதராபாத்தில் ப்ராஜெக்ட் கே படப்பிடிப்பில், ஒரு அதிரடி ஷாட்டின் போது, ​​எனக்கு காயம் ஏற்பட்டது. ஹைதராபாத்தில் இருந்து விமானம் மூலம் வீடு திரும்பினேன். ஸ்ட்ராப்பிங் செய்யப்பட்டு ஓய்வு பரிந்துரைக்கப்பட்டது.. ஆமாம் வலி.. இயக்கம் மற்றும் சுவாசம் என எல்லாம் சரியாக சில வாரங்கள் ஆகும் என்று அவர்கள் கூறுகிறார்கள். வலி குறைய சில மருந்துகள் உள்ளன.


எனவே படப்பிடிப்பில் செய்ய வேண்டிய அனைத்து வேலைகளும் இடைநிறுத்தப்பட்டு, குணமடையும் வரை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.


நான் ஜல்சாவில் ஓய்வெடுக்கிறேன் . அனைத்து அத்தியாவசிய தேவைகளுக்கு மொபைல் இருக்கிறது.  ஓய்வில் இருப்பதால் இன்று மாலை ஜல்சா கேட்டில் உள்ள நலம் விரும்பிகளை என்னால் சந்திக்க முடியாது.. அதனால் வரவேண்டாம்.. வர விரும்புபவர்களுக்கு உங்களால் முடிந்தவரை தெரிவிக்கவும்.


மற்றபடி எல்லாம் நலம்..” என தெரிவித்திருந்தார்.