மயிலாடுதுறை திருஇந்தளூரில் அமைந்துள்ள பழமையான பிரசித்தி பெற்ற பரிமளரெங்கநாதர் திருக்கோயில். பெருமாள் பள்ளிகொண்ட நிலையில் அருள்புரியும் ஸ்ரீரங்கம் உள்ளிட்ட பஞ்ச அரங்கங்களில் இது ஐந்தாவது தலமாகும். திருமங்கையாழ்வார் உள்ளிட்ட ஆழ்வார்களால் பாடல் பெற்ற 1,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த கோயில், சந்திரனின் சாபம் தீர்த்ததும், 108 வைணவ திவ்ய தேசங்களில் 22-வது திவ்யதேசமும் ஆகும்.
இங்கு ஆண்டுதோறும் பங்குனி உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெறும், இந்தாண்டு பங்குனி உற்சவம் கடந்த 2 -ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகின்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான புஷ்ப பல்லக்கு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு பரிமள ரங்கநாதர் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் ராஜ அலங்காரத்தில் புஷ்ப பலத்திற்கு எழுந்தருளினார்.
Mettur dam: மேட்டூர் அணையின் நீர் வரத்து 346 கன அடியில் இருந்து 334 கன அடியாக குறைவு
தொடர்ந்து பல வகையான மலர்கள் மற்றும் அலங்கார மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பள்ளக்கில் பெருமாள் எழுந்தருளியதும் சிறப்பு மகா தீப ஆராதனை நடைபெற்றது. பின்னர் மேளதாள வாத்தியங்கள் முழங்க நான்கு ரத வீதிகளில் புஷ்ப பல்லக்கில் பெருமாள் வலம் வந்தார். முன்னதாக கண்கவர் வானவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்