சிவனின் மறு அவதாரமாக இருக்கக் கூடியது தான் வரண ஆவஹர்ஷண பைரவர். பொதுவாக சிவன் கோவில்களில் கால பைரவரின் சன்னதியானது சிறிய அளவில் தெற்கு நோக்கி அமைந்திருக்கும். ஈரோடு மாவட்டம் காங்கேயம் மெயின் ரோடு அவல்பூந்துறை இராட்டை சுற்றி பாளையத்தில் அமைந்துள்ள, இக்கோவிலில் பைரவர் மேற்கு பார்த்து அமந்திருப்பது தனிச்சிறப்பு. இதுவரை உலகிலேயே எங்கும் இல்லாதவாறு அறுபத்து நான்கு பைரவர்களும் ஒரே இடத்தில் இருப்பது மட்டுமல்லாது 39 அடி கால பைரவர் சிலை மிக பிரம்மாண்டமாக நிறுவப்பட்டுள்ளது.

 

உலக சாதனை புத்தகத்தில் இடம்:

 

இந்த unique book of world record எனும் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இக்கோவிலின் திருப்பணியானது, ஏழு வருடங்களாக குருமார்களின் ஆசியோடும் பெரியோர்களின் ஆசிர்வாதத்தோடும் நடைபெற்று வந்த நிலையில், வரும் 2013-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ம் தேதி மாசி 29 திங்கட்கிழமை காலை 10:18 மணிக்கு 'மகா கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது.

 

ஒரு கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டால் மூன்று ஜென்மங்களின் பாவங்கள் தீரும் என்பது ஐதிகம். இதுவரை எந்த கோவில் கும்பாபிஷேகத்திலும் இல்லாதவாறு, நம் கோவிலில் மக்கள் பார்வையாளராக மட்டுமல்லாமல் தாங்களும் ஒரு அங்கமாக கலந்து கொண்டு, அபிஷேக ஆராதனை செய்யும் வாய்ப்பு இருப்பது தனிச்சிறப்பு. இக்கோவிலின் மூலவரான ஸ்வர்ண ஆஹர்ஷண பைரவர் ஆரோக்கியத்திற்கும், செல்வ வளத்திற்கும் ஆன அட்சய பாத்திரத்தை கையில் ஏந்தியவாறு அமையப் பெற்றுள்ளார். நாம் எதை முழு மனதாக அர்ப்பணிக்கிறோமோ அதை பல மடங்காக பெருக்கி கொடுக்கும் வல்லமை பெற்றவர். நம் ஆலயத்தில் பிரம்மாண்டமாக அமைந்துள்ள 60 கிலோ பஞ்சலோக சிலைக்கு நெய் ஆரோக்கியத்தின் வடிவமாகவும் நாணயங்கள் செல்வத்தின் வடிவமாகவும் அர்ப்பணிக்கப்படும் என்பது நம்பிக்கை








 

மகா கும்பாபிஷேக நிகழ்ச்சி நிரல்

 

நான்கு கால பூஜை

 

1 10.03.2023 மாசி மாதம் 26-ம் நாள் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு ஸ்வர்ண ஆஹர்ஷண பைரவ பஞ்சலோக சிலைக்கு பொது மக்களால் நெய் அபிஷேகம் 

 

2. 11.03.2023 மாசி மாதம் 2-ம் நாள் சனிக்கிழமை காலை 10 மணிக்கு கணபதி ஹோமத்திற்கு பிறகு முதற்கால பூஜை ஆரம்பம். 

 

3.11.03.2023 மாசி மாதம் 27-ம் நாள் சனிக்கிழமை மதியம் 2:30 மணிக்கு தீர்த்தம் அவல்பூந்துறை ஈஸ்வரன் கோவிலில் இருந்து பைரவர் ஆலயத்திற்கு பொது மக்களால் தீர்த்தம் எடுத்து வருதல், தீர்த்த ஊர்வலம் யானை, குதிரை, கிராமிய நிகழ்ச்சி மற்றும் வானவேடிக்கையுடன் சிறப்பாக நடைபெறும்.

 

4.12.03-2023 மாசி மாதம் 28- ம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு இரண்டாம் கால பூஜை, மாலை 5 மணிக்கு மூன்றாம் கால பூஜை, இரவு 7 மணிக்கு மேல் பாரம்பரிய கும்மி திருவிழா.

 

5. 13.03.2023 மாசி மாதம் 29-ம் நாள் திங்கட்கிழமை காலை மணிக்கு நான்காம் கால பூஜை. 10:15 மணிக்கு மஹா கும்பாபிஷேகம் மற்றும் தீபாராதனை 10.03.2023 வெள்ளி முதல் 13.03.2023 திங்கள் வரை அன்னதானம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.