கரூர் அசோக் நகர் பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு சக்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு முகூர்த்த கால் நடும் பணி சிறப்பாக நடைபெற்றது.


 




கரூர் மாவட்டம் தான்தோன்றி மலை அசோக் நகர் பகுதியில் குடிகொண்டு அருள் பாலைத்து வரும் அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் அருள்மிகு ஸ்ரீ வாராகி அம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் ஆலயங்கள் புதிதாக கட்டப்பட்டு அதன் தொடர்ச்சியாக மகாகும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு தான்தோன்றி வரை அசோக் நகர் அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் ஆலயத்தில் முகூர்த்த கால் நடும் பணி சிறப்பாக நடைபெற்றது.


 




நிகழ்ச்சியை முன்னிட்டு முகூர்த்த காலுக்கு வேப்பிலை கட்டி, சந்தன பொட்டிட்டு, வண்ண மாலையில் அணிவித்த பிறகு ஆலயத்தின் சிவாச்சாரியார் வேத மந்திரங்களுக்கு படி பெண் பக்தர்கள் முகூர்த்த கால்லை நட்டனர். மூர்த்த காலுக்கு பால் நவதானியங்கள் ஒலித்த பொருட்களை வைத்து வழிபாடு நடத்தினர். மூத்த காலுக்கு கற்பூர தீபாராதனை காட்டப்பட்டது.


 




 


மேலும்,  காவிரி ஆற்றிற்கு சென்று தீர்த்தம் கொண்டு வரும் நிகழ்ச்சியும்,  மாலை முளைப்பாரி அழைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று  கோபுர கலசத்திற்கு மகா கும்பாபிஷேக விழாவும் மற்றும் மூலவர் சக்தி விநாயகர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷே விழாவும் நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளனர்.  இந்த விழாவிற்கு பொதுமக்கள் தங்களால் இயன்ற பொருளுதவி மற்றும் யாகசாலைக்கு தேவையான பொருட்களை வழங்கி அருள்மிகு ஸ்ரீ சக்தி விநாயகர் அருள் பெற ஆலய நிர்வாகிகள் சார்பாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.