கும்பாபிசேகம் ( Kumbabhishekam )என்றால் என்ன ?


கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது முன்னோர் வாக்கு  அப்படி   கட்டி முடிக்கப்பட்ட கோவில்களுக்கு,  கும்பாபிஷேகம் நடத்துவது முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. கும்பாபிசேகம் ( அ) குடமுழுக்கு விழா ( அ ) நன்னீராட்டு பெருவிழா, ஒவ்வொரு இந்து கோவிலிலும் 12  ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டிய ஒரு நடத்த வேண்டும் என நம்பப்படுகிறது. இவ்வாறு கும்பாபிஷேகம் நடைபெறும் பொழுது கோவில் கருவறையில் உள்ள கடவுள்களுக்கு சக்தி புதுவிக்கப்படுவதாகவும், தெய்வத்தன்மை அதிகரிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. குடத்தில் பல்வேறு நீர் நிலைகளில் கொண்டுவரப்பட்ட நீரை நிரப்பி  பல்வேறு மூலிகைகள் ஆன்மீகச் சார்ந்த பொருட்கள் கலக்கப்பட்டு, சில நாட்கள் மாபெரும் யாகம் வளர்க்கப்படும். எவ்வாறு வளர்க்கப்படும் யாகசாலையில், பல்வேறு ஆன்மீகப் பொருட்கள் மூலம் வேள்வி வளர்க்கப்பட்டு மந்திரங்கள் உற்சவிக்கப்படும். இவ்வாறு கூறப்படும் மந்திரத்தால் புனித நீர் சக்தி பெறுவதாக நம்பப்படுகிறது.




இந்த புனித நீரை கோபுரத்தில் உள்ள கலசத்தின் மீது, குறிப்பிட்ட நன்னாளில் ஊற்றும் பொழுது அந்த கலசங்கள் சக்தி பெற்று, அதன் மூலம் கருவறையில் உள்ள தெய்வத்திற்கு சக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை. கும்பாபிஷேகத்தை வருடத்திற்கு மூன்று முறை நேரில் கண்டால் ஒரு கோவில் கட்டியதற்கு சமம் என நம்பப்படுகிறது. இந்த பொண் மக்கள் மீது தெளிக்கப்படும் பொழுது, பாவங்கள் நீங்கி மனது நிம்மதி அடையும் என பக்தர்கள் நம்புகின்றனர்.


 





பருக்கல் கிராமத்தில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா 


 

 

 

செங்கல்பட்டு மாவட்டம் , அச்சிறுபாக்கம் அடுத்த பருக்கல் கிராமத்தில் உள்ள முத்து மாரியம்மன், கங்கை அம்மன், நாகாத்தம்மன், கருமாரியம்மன், விநாயகர், , முருகர், நவகிரகங்கள் உள்ளிட்ட ஆலயங்கள் புதியதாக கிராம மக்களால் ஒன்றிணைந்து கட்டி முடிக்கப்பட்டுள்ளது.  இந்த கும்பாபிஷேக விழாவானது ஏப்ரல் 21-ந் தேதி காலை மங்கல இசை முழங்க விக்னேஸ்வரர் பூஜை, லட்சுமி பூஜை, நவகிரக பூஜை, கோபூஜை, கணபதி பூஜை,  மகா தீபாரதனை நடைபெற்றது. விழாவின் முதல் நாளன்று வாஸ்து சாந்தி, முதல் கால யாக பூஜை, தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 



மகா கும்பாபிஷேக விழா 


 

மேலும், கும்பாபிஷேக தினகரமான இன்று காலை 6 மணிக்கு மங்கள இசை உடன் இரண்டாம் கால யாக பூஜையுடன் யாகசாலையில் மகா தீபாரதனையும் யாகசாலையில் இருந்து கலசங்கள் புறப்பட்டு கோயிலை வலம் வந்து ஶ்ரீ விநாயகர், முருகர், முத்துமாரியம்மன், நாகாத்தம்மன், கருமாரியம்மன் ஆகிய கோயில்களின் கோபுரத்தில் உள்ள கலசங்களுக்கு மற்றும் நவகிரகங்களுக்கும் காலை 10:30 மணிக்கு புனித நீரினை சிவாச்சாரியார்கள் கோபுர கலசத்திற்கு கும்பாபிஷேகம்  நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகம் விழாவை பார்ப்பதற்கு சுற்றுவட்டாரத்தில் இருந்து பல்வேறு  கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  கும்பாபிஷேக விழாவை   முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.  மேலும் விழாவில் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.