மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெள்ளக்குளம் கிராமத்தில் 108 வைணவத் திருத்தலங்களில் 39 வது திவ்யதேசமான, ஸ்ரீஅண்ணன் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. குமுதவள்ளி இத்தலத்தில் திருமங்கை ஆழ்வார் 10 பாசுரங்கள் பாடி மங்களாசாசணம் செய்துள்ளார். இத்தகைய சிறப்பு வாய்ந்த பழமையான கோயிலில் ஆண்டு தோறும் திருப்பதியை போன்று புரட்டாசி மாதம் 12 நாட்கள் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம் .
200 ஆண்டுகள் பழமையான ஐம்பொன் சிலைகள் திருட்டு - திருவண்ணாமலையில் 4 பேர் கைது
இந்தாண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 27- ம் தேதி கொடியேற்றத்துடன் பெருமாள் அவதரித்த பாசுரங்கள் பாடி தொடங்கியது. தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் ஸ்ரீ அண்ணன்பெருமாள் தேரில் எழுந்தருள, தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தொடர்ந்து தீர்த்தவாரி நடைபெற்றது. அதனை முன்னிட்டு பெருமாள் கோயில் வாயிலில் எழுந்தருள சிறப்பு திருமஞ்சனம் , மகாதீபாராதனையும் நடைபெற்றது.
காஞ்சிபுரம்: புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை.. அத்திவரதர் கோவிலில் குவிந்த பக்தர்கள்..
பின்னர் பெருமாளை கோயில் முன்பு உள்ள வெள்ளக்குள தீர்த்தத்தில் புனிதநீராட்டினர். அப்போது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினர். இதேபோன்று புரட்டாசி மாத சனிக்கிழமை அடுத்து மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பெருமாள் ஆலயங்களிலும் சிறப்பு பூஜைகளும் யாகங்களும் வழிபாடுகளும் நடைபெற்று வருகிறது. இதைப் போன்று மாவட்டத்தில் உள்ள பல்வேறு இந்துக்களின் வீடுகளில் புரட்டாசி மாதம் சனிக்கிழமை வழிபாடுகள் மேற்கொண்டுள்ளனர்.
ராகுல் காந்தியின் நடை பயணம் வெற்றி பெற வேண்டி மயிலாடுதுறையில் காங்கிரஸ், மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் துர்க்கை அம்மன் ஆலயத்தில் கையில் அகல் தீபங்களை ஏற்றி வழிபாடு! மயிலாடுதுறை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ஒற்றுமையை வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். தமிழ்நாடு, கேரளா மாநிலங்களை தாண்டி மூன்றாவது மாநிலமாக கர்நாடக மாநிலத்தில் நடைபெறும் நடை பயணமான பாரத் ஜோதா யாத்திரா என்ற ராகுல் காந்தியின் பாதயாத்திரை வெற்றி பெற வேண்டி மயிலாடுதுறையில் காங்கிரஸ் மற்றும் மகிலா காங்கிரஸ் கட்சியினர் வழிபாடு நடத்தினர்.
மயிலாடுதுறை மகா துர்க்கை அம்மன் ஆலயத்தில் கையில் அகல் தீபங்களை ஏந்தி ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் ராகுல் காந்தியின் பாதயாத்திரை வெற்றிகரமாக நிறைவு செய்ய உடல் ஆரோக்கியம் வேண்டி பிரார்த்தனை செய்தனர். இந்த பிரார்த்தனையில் மயிலாடுதுறை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்.
Baakiyalakshmi Serial: கல்யாணம் ஆன முதல் நாளே கழட்டி விடப்பட்ட கோபி... ஷாக் ஆன புதுமாப்பிள்ளை!