உலகாளும் ஈசன் உலகிற்கு படி அளக்கும் லீலையை எடுத்துரைக்கும் வகையில் நடைபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் அஷ்டமி சப்பர விழா - வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்திகோஷம் முழங்க சாமி தரிசனம். 

Continues below advertisement

இந்த அஷ்டமி சப்பர திருவிழாவில் மீனாட்சியம்மன் எழுந்தருளியுள்ள சப்பரத்தை பெண் பக்தர்கள் மட்டுமே வடத்தினை பிடித்து இழுத்துசெல்வது தனிச்சிறப்பாகும்.

கடம்பவனத்துப் பேரரசி மீனாட்சி, மதுரையின் பெருமைக்கு காரணமாக விளங்குகிறாள். ‘ஏறிய சிவிகை இறங்காத பெருமாட்டி’ என்றே மீனாட்சியை பெருமை கொள்வர். சித்திரை மாதமே போற்றும் மீனாட்சியின், அருள் மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் தேவரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டு தலங்களில் முதலாவது தலமாகும். இப்படி பல்வேறு பெருமைகளை தாங்கி நிற்கும் மீனாட்சியம்மன் கோயிலை மையமாக வைத்தே மாமதுரை நிர்மாணிக்கப்படுகிறது. தமிழ் மாதங்களில் வழியே பல்வேறு திருவிழா முன்னெடுக்கப்படும்.,

Continues below advertisement

- 7 அடி உயர முள் படுக்கையில் படுத்து பெண் சாமியார் அருள்வாக்கு...குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள்

மார்கழி மாதத்தில் உலகில் உள்ள அனைத்து ஜீவராசிக்கும் இறைவன் படி அளக்கும் விதத்தை  குறிக்கும் நிகழ்ச்சியாக கருதப்படும்  மதுரையில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வர் திருக்கோயில்  சார்பாக நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்றான 'அஷ்டமி சப்பரம்' என்னும் தேர் திருவிழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. மார்கழி மாத தேய்பிறை அஷ்டமி நாளில், சுவாமியும், அம்மனும், மதுரை நகர் வீதிகளின் வழியாக அனைத்து உயிர்களுக்கும் படி அளக்கும் வகையில் உலா வருவது வழக்கம். இந்நிகழ்ச்சி இன்று அதிகாலையே கோயிலில் இருந்து சுவாமி, அம்பாள் இருவரும் புறப்பாடாகி, மதுரையின் நான்கு மாசி வீதியில் வலம் வந்து அங்கிருந்த சப்பரத்தில் சுவாமி பிரியாவிடையுடனும், அம்மன் தனியாகவும் சப்பரங்களில் அடியார்கள்  கயிலாய வாத்தியம் முழங்க வீதியுலா வந்தனர் அம்மன் சப்பரத்தை பெண்கள் இழுப்பது தனிச்சிறப்பாகும்.
 
நான்கு மாசி வீதிகளிலிம் வலம் வந்த சப்பரத்தை ஆயிரக்கணக்கான மக்கள் சாமி தரிசனம் செய்தனர். மேலும் கீழே சிதறி கிடந்த அரிசியை கூடியிருந்த பக்தர்கள் எடுத்து கொண்டு வீடுகளில் சென்றனர் . திருவிழாவில் எடுக்கப்பட்ட அரிசை வீட்டில் வைத்து வேண்டிக்கொண்டால் அள்ள, அள்ள உணவு கிடைத்து பசி எனும் நோய் ஒழியும் என்ற நம்பிக்கையையும் உள்ளது.

மதுரையில் வாழ்ந்து அஷ்டமி பிரதட்சிணம் செய்வோர்க்குத் துன்பம் நீங்கி முக்தி கிடைப்பது உறுதி என்றும் இறைவன் சிவன் கூறியதை நிகழ்த்தும் வகையிலான நடைபெறும் இந்த அஷ்டமி சப்பர விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிநெடுகிலும் சாமி தரிசனம் செய்தனர்.