அபய பிரதான ரெங்கநாத சுவாமி வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஆலயத்தில் ஆழ்வார் மோட்சம் நடைபெற்றது.

Continues below advertisement

 

 

Continues below advertisement

 

வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு கரூர் மேட்டு தெரு பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ அபய பிரதான ரெங்கநாதர் சுவாமி ஆலயத்தில் நாள்தோறும் சுவாமி திருவீதி உலா சிறப்பு அலங்காரத்தில் காட்சி தருகிறார். இந்நிலையில் வைகுண்ட ஏகாதசி இராப்பத்து ஒன்பதாம் நாள் நிகழ்ச்சியில் அபய பிரதான ரெங்கநாத சுவாமி ஆழ்வார் மோட்சத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

 

நிகழ்ச்சியை முன்னிட்டு உற்சவர் சுவாமிக்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று அதை தொடர்ந்து சுவாமிக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு மேளதாளங்கள் முழங்க அபய பிரதான ரெங்கநாத சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக ஆண்டாள் சன்னதி அருகே மாலை மாற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

 

 

 

பின்னர் வைகுண்ட ஏகாதசியின் விழாக்கள் நிறைவு பெறும் பட்சத்தில் ஆழ்வார் மோட்சம் நடைபெற்றது. பின்னர் கூடி இருந்த அனைத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டு வைகுண்ட ஏகாதசியின் இராபத்து ஒன்பதாம் நாள் நிகழ்ச்சி சிறப்பாக நிறைவு பெற்றது. நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக சிறப்பாக செய்தனர்.