காஞ்சி வரதராஜ பெருமாள் செவிலிமேடு பகுதியில் எழுந்தருளி ராமானுஜர் கோயிலில் அனுஷ்டான குள உற்சவம்  வெகு சிறப்பாக நடைபெற்றது.

 

வரதராஜ பெருமாள்

 

வைகுண்ட ஏகாதசி அன்று வரதராஜ பெருமாளின் தரிசிக்க ராமானுஜர் காஞ்சிபுரம் வந்த போது வழி தெரியாமல் செவிலிமேடு பகுதியில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் சிக்கிக் கொண்டார். அதன் பின் வைகுண்ட ஏகாதசி முடிந்த 12 வது நாள் வரதராஜ பெருமாள் தாயாருடன் வேடுவன் வேடத்தில் ராமானுஜருக்கு காட்சி தந்தார்.  மேலும் ராமானுஜரின் தாகம் தீர்க்க பெருமாள் அனுஷ்டானகுள சாலை கிணற்றை உருவாக்கினார் என்று புராணங்கள் கூறுகின்றது.



 

சிறப்பு திருமஞ்சனம்

 

அன்று முதல் தற்போது வரை வரதராஜ பெருமாளுக்கு இந்த அனுஷ்டான குளத்தில் இருந்துதான் நீர் எடுத்துச் சென்று அபிஷேகம் செய்யப்படுகிறது. இதனை நினைவு கூறும் வகையில் வருடம்தோறும் வைகுண்ட ஏகாதசி முடிந்த 12 ஆம் நாள் அனுஷ்டான குள உற்சவம் செவிலிமேடு ராமானுஜம் சன்னதியில் நடைபெறும். அவ்வகையில்  வரதராஜ பெருமாள் ராமானுஜர் உடன் கோயிலில் இருந்து புறப்பட்டு செவிலிமேட்டில் உள்ள ராமானுஜர் கோயிலை சென்றடைந்தார். அங்கு சாலை கிணறு தீர்த்தத்தில்,  பெருமாளுக்கும் சிறப்பு திருமஞ்சனம்  தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது.



 

ஏராளமான பக்தர்கள்

 

 மாலை 4 மணிக்கு பெருமாள் வேடுவர் இடத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து செவிலிமேடில் இருந்து புறப்பட்டு ஊர்வலமாக காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கோயில் உள்ள தேசிகர் சன்னதியில் வரதராஜ பெருமாளுக்கும் ராமானுஜருக்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும்.  இதனைத் தொடர்ந்து தேசிகர் சன்னதியில் அளிக்கப்படும் மரியாதையை ஏற்றுக்கொண்டு அதன்பின் இரவு வரதராஜ பெருமாள் திருக்கோவிலுக்கு சென்றடைவார்.



 

இந்த உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கு பெற்று வேடுவன் வேடத்தில் இருந்த வரதராஜ பெருமாளை தரிசித்தனர். விழாவினை ஒட்டி மாமன்ற உறுப்பினர் மோகன் ஆயிரம் பேருக்கு அறுசுவை அன்னதானம் அளித்தார்.


 


காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் 

 

அத்திவரதர் புகழ் பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் 108 திவ்ய தேசங்களில் 43 வது திவ்ய தேச தலமாக உள்ளது . ஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் ஹஸ்தகிரி, திருக்கச்சி, வேழமலை, அத்திகிரி ஆகிய பெயராலும் அழைக்கப்படுகிறது. வைணவத்தில் ஸ்ரீரங்கம், திருப்பதி, கர்நாடகாவில் உள்ள திருநாராயணபுரம் மற்றும் காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் ஆகிய நான்கு தலங்களில் வழிபட்டால் அவருக்கு வைகுண்ட பதவி நிச்சயம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. 


வருடத்திற்கு 200 நாட்களுக்கு மேல் பல்வேறு உற்சவங்கள் நடைபெறும் மிகவும் முக்கிய கோவிலாக கோவில் வழங்கி வருகிறது. 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் அத்திவரதர் விழாவும், வருடம் தோறும் நடக்கும் வைகாசி பிரம்மோற்சவம் இந்த கோவிலில் மிக முக்கிய திருவிழாவாக இருந்து வருகிறது. வைகாசி பிரம்மோற்சவத்தின்போது நடைபெறும் கருட சேவையை காண பல லட்சம் மக்கள் குவிவதும் வழக்கம்.


இக்கோவிலின் பிரதான ராஜகோபுரம் மேற்கு நோக்கியபடி 135 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இக்கோவிலில் உள்ள நூறு கால் மண்டபத்தில் நான்கு மூலைகளிலும் அமைந்துள்ள மிகப்பெரிய தொங்கும் கருச்சங்களில் கோவிலில் மற்றொரு தனிச்சிறப்பு. இக்கோவிலில் உள்ள பிரதான குலத்திற்கு அனந்த சரஸ் என்ற பெயர் உள்ளது. இக்கோவிலில் மூலவராக தேவராஜ பெருமாள், உற்சவமூர்த்தியாக பேரருளாளன் ,தயாராக பெருந்தேவி தாயார், இதுபோக மூலஸ்தானத்திற்கு அருகே நரசிம்மர் சன்னதி அமைந்துள்ளது. இரண்டாம் பிரகாரத்தில் மலையாள நாச்சியார், ஆழ்வார்கள், ராமானுஜர் போன்ற சன்னதிகளும் அமைந்துள்ளன .


மிக அரிதாக காட்சியளிக்கும் 12 திருக்கழுங்கள் கரங்களுடன் சக்கரத்தாழ்வாழும் காட்சி தருகிறார்.