சபரிமலை சிசனால் ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு வரும் பக்தர்கள், பழனிக்கு வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்வது வழக்கம். இதனால் கார்த்திகை மாதம் வந்தாலே பழனி மலை கோவில் அடிவாரத்தில் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதும். குறிப்பாக ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் வெளிமாவட்ட பக்தர்கள் அதிக அளவில் பழனிக்கு வருகை தருவார்கள் அவ்வாறு வரும் பக்தர்கள் பழனி முருகப்பெருமானை தரிசனம் செய்த பின்பு புகழ்பெற்ற பஞ்சாமிர்தத்தை வாங்கி செல்கின்றனர். இதனால் அடிவார பகுதியில் பஞ்சாமிர்த விற்பனை அதிகமாக இருக்கும். மேலும் தங்கரத புறப்பாட்டிலும் பக்தர்கள் பலர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்கின்றனர்.
Messi Retirement: கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வா..? ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்த மெஸ்ஸி..!
இந்தநிலையில் பழனி முருகன் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது,பழனி முருகன் கோவிலில் தமிழ்மாதமான கார்த்திகை மாதத்தில் மட்டும் அதாவது கடந்த நவம்பர் 17-ந்தேதி முதல் டிசம்பர் 12-ந்தேதி வரை 10 லட்சத்து 84 ஆயிரத்து 242 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இதில் ரோப்கார் மூலம் 1 லட்சத்து 7 ஆயிரத்து 678 பேரும், மின்இழுவை ரயில் மூலம் 1 லட்சத்து 72 ஆயிரத்து 956 பேரும் சென்றுள்ளனர்.
விசிகவுக்கு கிடைத்த காமராஜர்! எதற்கும் அஞ்சாத சிங்கம் திருமாவளவன் - திருநாவுகரசர் எம்.பி புகழாரம்
இதேபோல் அன்னதானத்தில் 1 லட்சத்து 48 ஆயிரத்து 549 பேர் உணவு சாப்பிட்டுள்ளனர். இதுதவிர கோவில் சார்பில் வழங்கப்படும் இலவச பஞ்சாமிர்தத்தை 3 லட்சத்து 97 ஆயிரத்து 125 பேரும், மோர், சுக்குகாபியை 1 லட்சத்து 37 ஆயிரத்து 500 பேரும் வாங்கி பயன் அடைந்துள்ளனர்.
பாம்புக்கடிக்கு சிகிச்சை பெற சென்ற விவசாயி தற்கொலை: அரசு மருத்துமனையில் அதிர்ச்சி சம்பவம்!
Crime : லிவ் இன் ரிலேஷன்ஷிப் டூ கல்யாணம்: மனைவியை 50 துண்டுகளாக வெட்டிய கணவர்... என்ன நடந்தது...?
கார்த்திகை மாதத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்த வகையில் உண்டியல், பஞ்சாமிர்தம், பிரசாதம், தங்கரதம், தங்கத்தொட்டில், தரிசன கட்டண சீட்டு மற்றும் இதர கட்டணங்கள் மூலம் கோவிலுக்கு ரூ.19 கோடியே 24 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. இதில் பஞ்சாமிர்தம் மூலம் ரூ.8 கோடியே 58 லட்சத்து 3 ஆயிரத்து 710-ம், உண்டியல் காணிக்கை மூலம் ரூ.3 கோடியே 75 லட்சமும், லட்டு, அதிரசம் போன்ற பிரசாத பொருட்கள் விற்பனை மூலம் ரூ.70 லட்சத்து 3 ஆயிரத்து 485-ம் வருமானமாக கிடைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்