மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த குளிச்சார் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பூமாதேவி, ஸ்ரீதேவி சமேத சீனிவாச பெருமாள் மற்றும் வீரஆஞ்சநேயர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோயிலின் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவானது நேற்று முன்தினம் விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து 2 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று, பூர்ணாஹூதி தீபாராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து கும்பாபிஷேக தினமான நேற்று காலை 2 -ஆம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.




பூஜையின் முடிவில், மகா பூர்ணாஹுதி மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்களை பட்டாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோயிலைச் சுற்றி வந்து விமான கும்பத்தை அடைந்தனர். அங்கு வேத விற்பன்னர்கள் வேதங்கள் ஓத, மேள தாளங்கள் ஒலிக்க, கொட்டும் மழையில் மகாகும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் மழையில் நனைந்து கொண்டே பக்தி பரவசத்துடன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


30 Years of Vijayism : விஜயிசம்.. 30 வருடங்கள்... நடிகர் விஜயின் மோசமான 5 தருணங்கள்.. அவமானங்கள் படிக்கட்டுகளாக மாறிய கதை..


மயிலாடுதுறை புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா - தேர்பவனி மற்றும் திருப்பலியில் திரளானோர் பங்கேற்பு.


மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய பங்குத் திருவிழா கடந்த நவம்பர் 23 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பத்து நாட்கள் மன்றாட்டு மாலை, நவநாள் ஜெபம், திருப்பலி உள்ளிட்ட பல்வேறு வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான சிறப்பு திருப்பலி மற்றும் திருத்தேர்பவனி  நடைபெற்றது.




மயிலாடுதுறை மறைவட்ட அதிபர் பேரருட்திரு.தார்சிஸ் ராஜ் அடிகளார் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் “நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன்” என்ற இறைவார்த்தையை மையப்படுத்தி, ஆவுடையார்கோவில் மறைவட்ட அதிபர் ஆரோ.அருளரசு அடிகளார் மறையுரையாற்றினார். இந்த சிறப்பு திருப்பலியில் உலக அமைதிக்காகவும், மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா நோய்த்தொற்று முற்றிலும் ஒழிய வேண்டியும், சமத்துவம், சகோதரத்துவம் நிலைத்திடவும் சிறப்பு பிரார்த்தனை வழிபாடுகள் நடைபெற்றது.




தொடர்ந்து புனித சவேரியாரின் திருஉருவம் தாங்கிய தேர்பவனி நடைபெற்றது. ஆலய வளாகத்தில் தொடங்கிய  தேர்பவனி அரசு மருத்துவமனை சாலை, காந்திஜி சாலை உள்ளிட்ட வீதிகள் வழியாக மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. திருப்பலி மற்றும் தேர்பவனி நிகழ்வுகளில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அன்பிய குழுவினர், மரியாயின் சேனை யினர், பாடகற்குழுவினர், வின்சென்ட் தே பவுல் சபையினர், இளையோர் இயக்கத்தினர், பங்கு மக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


G.P Muthu : 175 தையல்.. உடம்பு முழுக்க கிழிக்கப்பட்ட ஜி.பி.முத்து.. அவரே சொன்ன அதிர்ச்சி தகவல்...