காஞ்சிபுரம் அடுத்த கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ மேற்காவ நாச்சியார் என்கின்ற மேகாத்தம்மன் திருக்கோவிலில் இன்று வெகு விமரிசையாக மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை காண சுற்றியுள்ள பல்வேறு கிரமத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.

 

கும்பாபிஷேகம் / குடமுழுக்கு விழா ( Kumbhabhishekam )

 

கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது  பெரியோரின் வாழ்க்கை. அவ்வாறு கட்டப்படும் கோவில்களுக்கு  குறைந்தபட்சம் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது குடமுழுக்கு விழா  நடத்த வேண்டும் என்பது ஐதீகமாக உள்ளது. அவ்வாறு குடமுழுக்கு விழா செய்வது மூலம் உள்ளிருக்கும்  கடவுளின் சிலைக்கு தெய்வத்தன்மை புதுப்பிக்கப்படுவதாக பக்தர்களால் நம்பப்படுகிறது. குடமுழுக்கு விழாவானது புனித கலசத்தில் பல்வேறு, ஆறுகளின் புனித நீரை நிரப்பி மந்திரங்களால் தெய்வத்தன்மை, ஏற்பட்ட நீரினால் சிலைகளுக்கும் கோபுரத்தின் உச்சியில் கலசத்தங்களுக்கும் புனித நீர் ஊற்றி குடமுழுக்கு விழா நடத்துவார்கள்.



 

தெய்வ சிலைகளும் கோபுர கலசங்களும் தெய்வத்தன்மை பெறுவதால் கோவிலுக்கு செல்லாமல் கோபுர தரிசனம் மூலமாக கடவுள் அருளைப் பெற முடியும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.  இதன் அடிப்படையில் தான் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்ற வார்த்தை வந்ததாகவும், ஒரு கருத்து உள்ளது.   மிகவும் முக்கியம் வாழ்ந்த விழாவாக குடமுழுக்கு விழா பார்க்கப்படுவதால் மிகச் சிறிய கோவில் என்றால் கூட பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடமுழுக்கு விழாவை காண வருகை புரிவார்கள்.



 

அருள்மிகு ஸ்ரீ மேற்காவ நாச்சியார்

 

காஞ்சிபுரம் ( Kanchipuram News ) : காஞ்சிபுரம் அடுத்த கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ மேற்காவ நாச்சியார் என்கின்ற மேகாத்தம்மன் திருக்கோவிலில் பல ஆண்டுகளாக சிறுகோவிலாக இருந்து வந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக புதியதாக புதுப்பிக்கப்பட்ட மூலவர் மேகாத்தம்மன் மற்றும் கூடுதலாக சப்த கன்னி கோவிலில் மற்றும் நவகிர கோவிலில் புதியதாக நிறுவப்பட்டு பணிகள் நிறைவடைந்த நிலையில் பூர்ண கும்ப  மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. 



 

கஜ பூஜை, அஸ்வ பூஜைகள் 

 

இத்திருக்கோவிலில் இன்று மஹா கும்பாபிஷேகம் விழாவனது வெகு விமரிசையாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவையொட்டி கோவில் வளகத்தில் யாக சாலை அமைக்கப்பட்டு   பூஜை, கோ பூஜை, லஷ்மி ஹோமம, விசேஷ திரவ்ய ஹோமம் பூர்ணாஹதி நடைபெற்று இன்று காலை கஜ பூஜை, அஸ்வ பூஜைகள் செய்து மஹா பூர்ணாஹதி தீபாரதனைகள் நடைபெற்றது. அதன் பின் ராஜ கோபுரம், விமானங்களுக்கு  பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகமானது  வெகு விமரிசையாக நடைபெற்றது. 



 

சிறப்பு அபிஷேக ஆராதனைகள் 

 

அதன்பின் அருள்மிகு ஸ்ரீ மேகாத்தம்மனுக்கு சிறப்பு தீப தூப தீபாராதனைகளும், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக பெரு விழாக்காண, மேலும் சுற்றியுள்ள பல்வேறு கிராமத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகம் நடைபெற்று கலசத்தில் ஊற்றப்பட்ட புனித நீரை பக்தர்கள் தெளித்து கொண்டனர். பொதுமக்கள் அனைவருக்கும் அருட் பிரசாதங்களும், அன்னதானங்களும் வழங்கப்பட்டது. மஹா கும்பாபிஷேக பெரு விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விழா குழுவினர் வெகு சிறப்பாக நடைபெற்றது.