மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாதபுரம் கிராமத்தில் ஸ்ரீ கல்யாணி அம்பிகா சமேத கைலாசநாதர் மற்றும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்கள் அமைந்துள்ளன. மிகுவும் பழமை வாய்ந்த இக்கோயிலில் திருப்பணிகள் செய்ய அப்பகுதி மக்கள்  முடிவெடுத்து, கோயிலை புதுப்பித்தல், வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பணிகள்  நடைபெற்று வந்தது. தொடர்ந்து பணிகள் முடிவுற்ற நிலையில், இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 11 -ஆம் தேதி, முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது.




JAISHANKAR ON UAE: இந்தியா- ஐக்கிய அரபு அமீரகத்தின் உறவு உலக மாற்றத்தையே வடிவமைக்கும் - மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்


தொடர்ந்து நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவுற்று பூர்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதனை அடுத்து யாகசாலையில் இருந்து புனிதநீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கடம் புறப்பாடு செய்யப்பட்டு, மேளதாள மங்கல இசை முழங்க கோயிலை வலம் வந்து கோயில் விமானத்தை அடைந்தது. பின்னர் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரை, வேத மந்திரங்கள் ஓத சிவாச்சாரியார்கள் விமான கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை சுந்தரேசன், ஜெகதீசன் குடும்பத்தினர் மற்றும் கிராம நிர்வாகிகள் செய்திருந்தனர். மேலும் கும்பாபிஷேக விழாவில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.




மயிலாடுதுறையில் நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த நமச்சிவாயமூர்த்தி கோயிலில் கார்த்திகை கடை சோமவாரத்தை முன்னிட்டு, 108 சங்காபிஷேகம். திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.


மயிலாடுதுறை அடுத்த கூறைநாடு வடக்கு சாலியத் தெருவில் நூற்றாண்டுகள் பழைமைவாய்ந்த ஸ்ரீ நமச்சிவாயமூர்த்தி கோயில் அமைந்துள்ளது. புதுவை ஆதீனம் சிதம்பரம் ஸ்ரீ பாதபூஜை அம்பலத்தாடும் சுவாமிகள் திருமடத்தின் 25 -வது குருமகா சந்நிதானமான நமச்சிவாயமூர்த்திகள் இங்கு ஜீவசமாதி அடைந்துள்ளதால் இப்பகுதி மக்கள் வணங்கி வருகின்றனர்.  




On this day in 2017: மூன்றாவது இரட்டை சதம்.. 7-ஆம் ஆண்டு திருமண நாள்.. ரோகித் சர்மாவின் இரட்டை கொண்டாட்டம்!


இக்கோயிலில் கார்த்திகை கடைசி திங்கள்கிழமையான நேற்று கடைசோமவார சங்காபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி, கோயிலில் 108 சங்குகள் அலங்கரித்து வைக்கப்பட்டு, சிறப்பு ஹோமம் வளர்க்கப்பட்டு, மகா பூர்ணாகுதி செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர், சங்குகளில் நிரப்பப்பட்டிருந்த புனித நீர் கொண்டு நமச்சிவாய மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மேலும், பால், தயிர், இளநீர், மஞ்சள் மற்றும் திரவியங்கள் உள்ளிட்ட மங்கல பொருட்கள் கொண்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பெண்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


Cinema Round-up : துணிவு அப்டேட்; அப்பாவாகும் ராம்சரண்.. நன்றி கடிதம் எழுதிய ரஜினி! - டாப் சினிமா செய்திகள்!