பிறந்தநாள் வாழ்த்து கூறியவர்களுக்கு நன்றி தெரிவித்த ரஜினி
டிசம்பர் 12 ஆம் தேதியான நேற்று, தனது பிறந்தநாளை கொண்டாடிய ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்த, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், இபிஎஸ், ஓபிஎஸ் போன்ற முக்கிய அரசியல்வாதிகளுக்கும், கமல், இளையராஜா, வைரமுத்து , ஷாருக்கான், அக்ஷய குமார், மோகன் லால், மம்மூட்டி, சரத்குமார், உதயநிதி ஸ்டாலின், தனுஷ் , சிவகார்த்திகேயன் போன்ற திரையுலக பிரபலங்களுக்கும் கிரிக்கெட் வீரர் சச்சினுக்கும் நன்றி கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வருகிறதா துணிவு படத்தின் இரண்டாவது பாடல்
பொங்கலுக்கு வெளியாகவுள்ள துணிவு படத்தின் செகண்ட் சிங்கிள் குறித்து அப்படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் காசேதான் கடவுளடா என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். சில நாட்களுக்கு முன் வெளிவந்த சில்லா சில்லா பாடல் அஜித் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
ஜெயிலர் படத்தின் க்ளிம்ப்ஸ்
ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி நேற்று காலையில், ஜெயிலர் படத்தின் அப்டேட் தொடர்பாக புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டது. அதில் படம் தொடர்பான புதிய தகவல் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என குறிப்பிட்டு இருந்தது. அதன் படி ஜெயிலர் படத்தில் இருந்து கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது.
வெளியானது லத்தி படத்தின் ட்ரெய்லர்
ராணா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் நந்தா மற்றும் ரமணா தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ஏ.வினோத் குமார் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் டிசம்பர் மாதம் 22ம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் 'லத்தி'. இப்படத்தில் நடிகர் விஷால் ஜோடியாக நடிகை சுனைனா நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையில் இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நேற்று, இப்படத்தின் ட்ரெய்லர் மாலை 5 மணிக்கு வெளியாகியது. இந்த படத்தில், கான்ஸ்டபுள் வேடத்தில் விஷால் நடித்துள்ளார்.
குழந்தையை எதிர்ப்பார்க்கும் ராம் சரண் - உபாசனா
தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் செல்ல மகன் ராம் சரண். இவருக்கும் உபாசனா காமினேனி என்பவருக்கும் கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்கள் பெற்றோர் ஆக உள்ளதாக நடிகர் சிரஞ்சீவி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
“ ராம் சரண்-உபாசனா காமினேனியின் திருமண வாழ்கையில் பத்து ஆண்டுகளுக்கு பிறகு, முக்கியமான திருப்புமுனை ஒன்று வர காத்துக் கொண்டிருக்கிறது. ஆம் இவர்கள் தங்களது முதல் குழந்தையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்” என நடிகர் சிரஞ்சீவி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஆர்ஆர்ஆர்
பாகுபலி புகழ் எஸ்.எஸ்.ராஜமெளலியின் திரைப்படமான ஆர்ஆர்ஆர், ஆங்கிலம் அல்லாத பிற மொழி பிரிவில் கோல் குலோப் 2023 விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.