மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான குமரக்கட்டளை உள்ளது. இங்குள்ள சுப்பிரமணியர் சுவாமி சன்னதியில் கோயில் புதுப்பித்தல், வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட திருப்பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. திருப்பணி பணிகள் முடிவுற்றதை தொடர்ந்து  மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. முன்னதாக ஆறு கால யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன. 




தொடர்ந்து கும்பாபிஷேக தினமான இன்று காலை 6 -ஆம் கால யாகசாலை பூஜை நிறைவுற்று, மகா பூர்ணாஹூதி செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிவாச்சாரியார்கள் யாகசாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கடங்களை தலையில் சுமந்து மேளதாளம் வாத்தியங்களுடன் கோயிலை சுற்றி வலம் வந்து விமான கும்பத்தை அடைந்தனர். அங்கு வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் ஓத கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 


Rahul Gandhi : ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது; அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? - சரவெடியாய் வெடித்த ராகுல்காந்தி




விழாவில் தருமபுரம் ஆதீனம் 27 -வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் மற்றும் மதுரை ஆதீனம், வேளாக்குறிச்சி ஆதீனம், சூரியனார் கோயில் ஆதீனம் ஆகிய ஆதீனங்களின் குரு மகா சன்னிதானங்கள் மற்றும் திருப்பனந்தாள் காசி மடத்து இளவரசு, திருவாவடுதுறை ஆதீன கட்டளை தம்பிரான் ஆகியோர் பங்கேற்று வழிபாடு நடத்தினர். கும்பாபிஷேக விழாவில் மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.


Rahul gandhi press meet: தகுதி நீக்கத்துக்கு அஞ்சமாட்டேன்; தொடர்ந்து கேள்வி கேட்பேன்.. கொந்தளித்த ராகுல்..









ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண