மத்திய காஷ்மீர் மாநிலம் கந்தர்பால் மாவட்டத்தைச் சேர்ந்த சலிமா என்ற சிறுமி திருக்குர்ஆனை முழுமையாக பார்க்காமல் எழுதி அம்மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். மேலும் சலீமா குர்ஆனை அச்சடித்து போன்ற அழகான கையெழுத்தில் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


திருக்குர்ஆனை எழுதிய இளம்பெண்


சில மாதங்களிலேயே திருக்குர்ஆனைத் தன் கையால் எழுதி முன்னுதாரணமாகத் திகழ்ந்துள்ளார் சலீமா. எனது தாத்தா, பாட்டி குடும்பத்தில் உள்ள அனைத்து ஆண், பெண் குழந்தைகளும் திருக்குர்ஆனை நன்றாக படிக்கவும், எழுதவும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்ததாக சலீமா கூறுகிறார். “வீட்டில் நிலவும் மதச்சூழல் காரணமாக, திருக்குர்ஆனுடன் சிறப்பான உறவை வளர்த்துக் கொண்டதுடன், குர்ஆனை எழுதும் ஆர்வத்தையும் வளர்த்துக்கொண்டேன். 2022 நவம்பர் 5ல் திருக்குர்ஆனை எழுதத் தொடங்கிய நான், இன்று செய்து முடித்துள்ளேன். ஒரு புனிதமான வேலை முடிந்தது," என்றார்.



வீட்டார்கள் உறுதுணை


நான் பட்டம் பெற்று வருகிறேன் என்றும் கூறிய அவர், தினமும் காலையிலும் மாலையிலும் வேலை முடிந்ததும் திருக்குர்ஆனை எழுதுவது வழக்கமாம். இந்த நேரத்தில், பெற்றோர்கள் மற்றும் அனைத்து குடும்ப உறுப்பினர்களும் மிகவும் உறுதுணையாக இருந்ததாக கூறுகிறார். வீட்டில் அனைவருமே மதத்தின் மீது தீவிர பற்று கொண்டிருப்பதால், இதனை செய்வதில் அனைவருமே பெருமை கொள்கின்றனர்.


தொடர்புடைய செய்திகள்: Virat Anushka: விருது விழாவில் அசத்தல் லுக்... க்யூட்டாக வந்து சிக்ஸர் அடித்த விராட் - அனுஷ்கா ஜோடி!


திருக்குர்ஆனை கற்றுக்கொடுக்கிறேன்


"திருக்குர்ஆன் எழுதும் போது எனக்கு என்ன தேவை என்று கேட்டு, அறிந்து தேவையான அனைத்து பொருட்களையும் எனமு வழங்கினர் என் குடும்பத்தினர். முதலில் அப்பகுதி மௌலவி சாஹிப்களுக்கு திருக்குர்ஆனை படிக்க கற்றுக்கொடுத்தேன், மேலும் திருக்குர்ஆன் பற்றிய அனைத்து வகையான அறிவையும் என்னால் முடிந்த அளவுக்கு பலருக்கு வழங்கினேன்", என்று கூறுகிறார் சலீமா.



நான்கு மாதத்தில் எழுதி முடித்தேன்


மேலும் "முதலில் குர்ஆனை மனப்பாடம் செய்தேன், அதன் பிறகு கையால் குர்ஆனை எழுத ஆரம்பித்தேன், கடைசியில் ஒரு வழியாக சுமார் நான்கு மாதங்களில் குறுகிய காலத்தில் இந்த வேலையை முடிக்க முடிந்தது", என்கிறார் சலீமா. இந்த சாதனையை செய்ததில், "நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்" என்ற அவருக்கு அந்த பகுதி மக்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். "எங்கள் பகுதியில் இதுபோன்ற நல்லொழுக்கமுள்ள ஒரு பெண் பிறந்ததில் நாங்கள் பெருமைப்படுகிறோம், ஒரு சிறந்த பணியைச் செய்து, அந்தப் பகுதியின் பெயரையும் எங்கள் குஜ்ஜார் இனத்தையும் பிரகாசமாக்கியுள்ளார், அதற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம். நாங்கள் பெருமையடைந்ததாக உணர்கிறோம், எங்களுக்கு இன்னும் அதிகமாக நம்பிக்கை பிறந்துள்ளது. அத்தகைய பெண்களை அரசாங்கம் ஊக்குவிக்கும் என்று நம்புகிறோம்," என உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.