மூன்று தெய்வங்களில் காக்கும் தெய்வமாக அறியப்படும் மகா விஷ்ணுவின் 10 அவதாரங்களில் மிக முக்கியமான அவதாரம் கிருஷ்ண அவதாரம். ஆயர்குலத்தில் கண்ணனாக வளர்ந்து, கிருஷ்ணராக அவர் செய்த லீலைகளும், சிறிய வயதிலேயே அவரது தாய்மாமன் கம்சனை கொன்று கிருஷ்ணர் நடத்திய திருவிளையாடல்களும் ஏராளம் என நம்பப்படுகிறது.


அப்பேற்பட்ட கிருஷ்ணர் ஆவணி மாதத்தில் பிறந்த நாளே கிருஷ்ண ஜெயந்தி என்று அழைக்கப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தி, கோகுலஷ்டமி மற்றும் ஜென்மாஷ்டமி என பல்வேறு மக்களின் நம்பிக்கையின்படி நேற்று செப்டம்பர் மாதம் 6ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டது.




வட இந்தியாவில் கோலாகலமாக கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி தமிழ்நாட்டிலும் ஆங்காங்கே வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. அந்தவகையில், நேற்று சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் உள்ள இஸ்கான், ஸ்ரீராதா கிருஷ்ணர் திருக்கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு வெகு சிறப்பாக கொண்டப்பட்டது. இதுகுறித்து இஸ்கான் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ”இஸ்கான் (அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம்) 7 செப்டம்பர் 2023 அன்று ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமியை சிறப்பாகக் கொண்டாடியது. பக்தர்கள் மற்றும் பொது மக்கள் கலந்துகொண்டு கிருஷ்ணரின் அருளைப் பெற்றனர். நேற்று 6 செப்டம்பர் 2023: ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணர் சிறப்பு தரிசனமும் ஆரத்தியும் இனிதே நடைபெற்றது.




இன்று 7 செப்டம்பர் 2023: காலை 730 மணியளவில் ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணர் சிறப்பு தரிசனம் துவங்கியது. பக்தர்கள் பகவானின் திருநாமத்தை பாடி மகிழ்ந்தனர். ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு ஆரத்தி நடைபெற்றது. அதனை தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் விநியோகிக்கப்பட்டது. பல்வேறு கண்காட்சிகள் அனைத்து வயது பிரிவினருக்கும் மறக்கமுடியாத அனுபவத்தை அளித்தது. பகவத் கீதை வகுப்பில் பங்கேற்பதற்கான சேர்க்கை நடைபெற்றது குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினர் விளையாட்டுகள், வினாடிவினா போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளைப் பெற்றனர்.” என தெரிவிக்கப்பட்டது. 




நிகழ்ச்சி: ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி திருவிழா


தேதி: 7 செப்டம்பர் மற்றும் 8 செப்டம்பர் 2023, (வியாழன் மற்றும் வெள்ளி)


தரிசன நேரம்: 7 செப்டம்பர்: காலை 8.30 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை, 8 செப்டம்பர்: காலை 7.30 மணி முதல் மதியம் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை.


இடம்: இஸ்கான், ஸ்ரீராதா கிருஷ்ணர் திருக்கோவில், பக்திவேதாந்த சுவாமி சாலை, அக்கரை, சோழிங்கநல்லூர், சென்னை-115