ஸ்ரீ வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் ஆடி இரண்டாம் வெள்ளியை முன்னிட்டு பக்தர்கள் வழங்கிய ஒரு லட்சம் வளையினால் மூலவர் வேம்பு மாரியம்மன் மற்றும் ஆலய முழுவதும் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.


 



ஆடி வெள்ளி என்றாலே பல்வேறு அம்மன் ஆலயங்களில் பல்வேறு அபிஷேகங்கள் அலங்காரங்கள் நடைபெற்ற நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பசுபதிபுரம் அருள்மிகு ஸ்ரீ வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் ஆடி இரண்டாம் வெள்ளியை முன்னிட்டு பக்தர்கள் வழங்கிய ஒரு லட்சம் வளையினால் மூலவர் வேம்பு மாரியம்மன் மற்றும் ஆலய முழுவதும் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.


 




ஆடி இரண்டாம் வெள்ளியை முன்னிட்டு நடைபெற்ற வளையல் அலங்காரத்தை காண கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் காலை முதல் ஆலயம் வரை தொடங்கி தற்போது நீண்ட வரிசையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அதை தொடர்ந்து அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.


கரூர் சுங்ககேட் ஆதி மாரியம்மன் ஆலயத்தில் ஆடி இரண்டாம் வெள்ளியை முன்னிட்டு சுவாமி எலுமிச்சை அலங்காரத்தில் பக்ரகளுக்கு காட்சியளித்தார்.




 


கரூர் சுங்ககேட் ஆதி மாரியம்மன் ஆலயத்தில் ஆடி இரண்டாம் வெள்ளியை முன்னிட்டு அமராவதி ஆற்றில் இருந்து தீர்த்தம் கொண்டுவரப்பட்டு அதன் தொடர்ச்சியாக மூலவர் ஆதி மாரியம்மனுக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள்,சந்தனம், அபிஷேகப் பொடி, அரிசி மாவு ,பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக மூலவர் மாரியம்மனுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்து பின்னர் எலுமிச்சம் கனியால் சிறப்பு அலங்காரம் நடைபெற்று தொடர்ச்சியாக ஆலயத்தின் பூசாரி மாரியம்மனுக்கு உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறிய பிறகு சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய் வைத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.


 




கனி அலங்காரத்தை காண கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மிக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை சுங்ககேட் ஆதி மாரியம்மன் கோவில் தெரு, பொதுமக்கள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர். மேலும் தொடர்ந்து இருபத்தி இரண்டாவது ஆண்டாக நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியில் மதியம் முதல் மாலை வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் அன்னதான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.