கரூர் மாவட்டம் சணப்பிரட்டி கிராமம், S. வெள்ளாளப்பட்டி பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர், அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.


 


 




இந்நிகழ்ச்சியை முன்னிட்டு காவிரி ஆற்றில் இருந்து ஏராளமான பக்தர்கள் தீர்த்தம் கொண்டுவரப்பட்டு அதன் தொடர்ச்சியாக  முதல் கால யாக வேள்வி, இரண்டாம் கால யாக வேள்வி, மூன்றாம் கால யாக வேள்வி என மூன்று கால யாக வேள்வி நடைபெற்று அதன் தொடர்ச்சியாக யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனிதத் தீர்த்தத்திற்கு ஆலயத்தின் சிவாச்சாரியார் மகா தீபாராதனை காட்டினார்.


 




தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க யாகசாலையில் இருந்து புறப்பட்ட புனித தீர்த்த கலசத்தை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்தவாறு கோபுர கலசம் கொண்டு வந்த பிறகு பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி கோசத்தின் எழுப்ப வான வேடிக்கையுடன் கோபுர கலசத்திற்கு மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.


 




 


அதன் தொடர்ச்சியாக சித்தி விநாயகர் மற்றும் மூலவர் பகவதி அம்மனுக்கு பூஜிக்கப்பட்ட புனித தீர்த்தத்தால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் பிறகு அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டு தீர்த்தம் தெளிக்கப்பட்டது.


 




 


கரூர் சணப்பிரட்டி S.வெள்ளாளப்பட்டி பகுதியில் நடைபெற்ற பகவதி அம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து கும்பாபிஷேக விழாவை சிறப்பித்தனர்.




 


தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் ஏற்பாட்டை வெள்ளாளப்பட்டி அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்து வந்தனர்.