கரூரில் மாசி மாதம் மற்றும் சித்திரை மாதங்களில் பல்வேறு தெய்வங்களின் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த மாதம் தொடக்கத்தில் கரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள காமாட்சி அம்மன் ஆலய திருவிழா நடைபெற்றது.


 


 




கரூர் மாவட்டத்தில் மாசி மாதம் மற்றும் சித்திரை மாதங்களில் பல்வேறு தெய்வங்களின் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த மாதம் தொடக்கத்தில் கரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள காமாட்சி அம்மன் ஆலய திருவிழா நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக வெங்கமேடு பகுதியில் உள்ள  ஸ்ரீ அன்ன காமாட்சியம்மன் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு ஆலயங்களில் மாசி மாத திருவிழா நடைபெற்று, வந்த நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வடிவேல் நகர் அருள்மிகு ஸ்ரீ அன்ன காமாட்சி அம்மன் ஆலயத்தில் மாசி மாத திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் கொண்டு வந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர்.


 


 




அதன் தொடர்ச்சியாக அன்ன காமாட்சி அம்மன் உள்ளிட்ட பல்வேறு பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக சுவாமிகளுக்கு பட்டாடை உடுத்தி, வந்த மாலைகள் அறிவித்து அதை தொடர்ச்சியாக சுவாமிக்கு உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறிய பிறகு அன்ன காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதை தொடர்ந்து அப்பகுதி ஏராளமான பெண் பக்தர்கள் தங்களது இல்லத்தில் அரிசி மாவுடன் கூடிய மாவிளக்கு பொங்கலை வைத்து ஆலயத்தில் வழிபாடு நடத்தினர்.


 


 




 


தொடர்ந்து ஆலய வாசலில் பக்தி பரவசமூட்டும் ஆன்மீக நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக மேள தாளங்கள், தாரதப்பட்டைகள் முழங்க உற்சவர் அன்ன காமாட்சி அம்மன் திருவீதி உலா சிறப்பாக நடைபெற்றது. அன்ன காமாட்சி அம்மன் உற்சவர் திருவிழாவை முன்னிட்டு உற்சவர் காமாட்சி அம்மனுக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் காமாட்சியம்மன் காட்சி அளித்தார். தொடர்ந்து திருவீதி உலா நடைபெற்று அதன் பின்னர் மஞ்ச நீர் விளையாடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. கரூர் வடிவேல் நகர் அருள்மிகு ஸ்ரீ அன்ன காமாட்சி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற மாசி மாத காமாட்சி அம்மன் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை அன்ன காமாட்சி அம்மன் ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.