கரூர் உழவர் சந்தை அருள்மிகு ஸ்ரீ வாராகி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற தை மாத பௌர்ணமி சிறப்பு அபிஷேக நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

தை மாத பௌர்ணமி முன்னிட்டு பல்வேறு அம்மன் ஆலயங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் உழவர் சந்தை அருள்மிகு ஸ்ரீ வாராகி அம்மன் ஆலயத்தில் வாராகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு வாராகி அம்மனுக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர் ,பஞ்சாமிர்தம், தேன்,நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி,அரிசி மாவு, பன்னீர், விபூதி, குங்குமம் உள்ளிட்ட வாசனை திரவியகளால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக வாராகி அம்மனுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. கரூர் உழவர் சந்தை அருள்மிகு ஸ்ரீ வாராகி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற தை மாத பௌர்ணமி சிறப்பு அபிஷேக நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய சிவாச்சாரியார் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்திருந்தார் .
கரூர் வெண்ணமலை அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் தைப்பூசத்தை முன்னிட்டு சுவாமி மயில்வாகன திருவீதி உலா.
தைப்பூசத்தை முன்னிட்டு வெண்ணமலை அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணியசுவாமி ஆலயத்தில் கொடியேற்றத்துடன் தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு வாகனத்தில் சுவாமி திருவீதி உலா காட்சி தருகிறார். இந்த நிலையில் தைப்பூசம் தேரோட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் இன்று மயில்வாகனத்தில் சுவாமி திருவீதி உலா காட்சியளித்தார்.
ஆலயத்தில் இருந்து மேள தாளங்கள் முழங்க முக்கிய வீதியில் வழியாக மயில் வாகன திருவீதி உலா நடைபெற்ற நிலையில் மீண்டும் ஆலயம் குடி புகுந்த சுவாமிக்கு மகா தீபாராதனை கட்டப்பட்டது. அது தொடர்ந்து அனைத்து பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. தைப்பூச சிறப்பு நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாகவும், பணியாளர்கள் சார்பாகவும் சிறப்பாக செய்திருந்தனர்.