மகாசிவராத்திரி 26ஆம் தேதி இரவு தொடங்கி 27ஆம் தேதி அதிகாலை வரை விடிய விடிய அபிஷேக ஆராதனைகளை நடைபெறும்.

 

தமிழ் மாதங்களில் வழியே பல்வேறு திருவிழா    

 

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலுக்கு, உள்ளூர், வெளியூர், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். தமிழ் மாதங்களில் வழியே பல்வேறு திருவிழா முன்னெடுக்கப்படும். இந்நிலையில் மீனாட்சியம்மன் கோயிலில்,  மகாசிவராத்திரி 26ஆம் தேதி அன்று இரவு தொடங்கி 27ஆம் தேதி அதிகாலை வரை விடிய விடிய அபிஷேக ஆராதனைகளை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகம் அறிவிப்பு அறிவித்துள்ளது


 

மகா சிவராத்திரி உற்சவம் வரும் 26ஆம் தேதி இரவு 10 மணி முதல் கோவில் நடை திறக்கப்பட்டு 27ஆம் தேதி அதிகாலை 5 மணி வரை விடியவிடிய அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெறும். மகாசிவராத்திரியன்று மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் மற்றும் உற்சவர் சன்னதிகளில் விடிய, விடிய அபிஷேக பொருட்கள் மூலம் அபிஷேக, ஆராதனைகள் நடைபெறவுள்ளதால் பொது மக்களும், சேவார்த்திகளும், பக்தப்பெருமக்களும் அபிஷேப் பொருட்களான பால், தயிர், இளநீர், பன்னீர் பழவகைகள் தேன், மஞ்சள் பொடி, எண்ணெய் நெய் மற்றும் இதர அபிஷேகப் பொருட்களை 26ஆம் தேதி மாலைக்குள் திருக்கோயில் உள்துறை அலுவலகத்திற்கு வழங்கலாம் - எனவும் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

பூஜை நேர விபரங்கள் - அம்மன் சன்னதி நேரம்

 

1ஆம் காலம் - 26ஆம் தேதி இரவு 10 மணி முதல் 10.40 வரை

 

2 ஆம் காலம் - இரவு 11மணி முதல் 11.40 வரை

 

3 ஆம் காலம் -இரவு 12 மணி முதல் 12.40 வரை

 

4ஆம் காலம் - 27ஆம் தேதி அதிகாலை 1மணி முதல் 1.40வரை

 

27ஆம் தேதி அதிகாலை 3.45 மணிக்கு 

 

அதிகாலை 4.00 மணி 

 

அதிகாலை 5.00 மணி 

 

சுவாமி சன்னதி நேரம்

 

1ஆம் காலம் - 26ஆம் தேதி இரவு 11 மணி முதல் 11.45 வரை

 

2ஆம் காலம் - 26ஆம் தேதி இரவு 12 மணி முதல் 12.45 வரை

 

3 ஆம் காலம் - 27ஆம் தேதி அதிகாலை 1 மணி முதல் 01.45 மணிவரை

 

4ஆம் காலம் -  27ஆம் தேதி அதிகாலை 2 மணி முதல் 02.45மணி வரை

 

27ஆம் தேதி அதிகாலை 3.45 மணிக்கு - அர்த்தஜாம பூஜை

 

27ஆம் தேதி அதிகாலை 4.00 மணிக்கு - பள்ளியறை பூஜை

 

27 ஆம் தேதி அதிகாலை 5.00 மணி - திருவனந்தல்

 

மாதந்தோறும் சிவராத்திரி வந்தாலும் மாசி மாதத்தில் வரும் சிவ ராத்திரி தான் மகா சிவராத்திரியாக அனுசரிக்கப்படுகிறது. சிவனுக்கே உரிய நாட்களில் மிக முக்கியமான நாள் இதுவாகும். மாசி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தசி திதியே மகா சிவராத்திரி என்று கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் உலகெங்கும் இருக்கும் சிவாலயங்களில் சிறப்பு வழிப்பாடுகள் நடத்த மற்றும் இரவு நான்கு கால பூஜைகள் நடத்தப்படும் என்பது குறிப்பிடதக்கது.