கரூர் சின்னாண்டாங் கோவில் சாலை அருள்மிகு ஸ்ரீ தீர்த்த மாரியம்மன் ஆலயத்தில் 48 ஆம் நாள் மண்டல அபிஷேக நிறைவு விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


 




 


கரூர் சின்ன ஆண்டாங் கோவில் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தீர்த்த மாரியம்மன் ஆலயத்தில் கும்பாபிஷே விழா நடைபெற்று நாள்தோறும் மண்டல அபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது. தற்போது மண்டல அபிஷேக நிறைவிழா சிறப்பாக நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியை முன்னிட்டு தீர்த்த மாரியம்மன் உள்ளிட்ட பரிவார சுவாமிகளுக்கு எண்ணை காப்பு சற்றி, பால் ,தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய்,இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், விபூதி, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.


 




 


அதைத் தொடர்ந்து தீர்த்த மாரியம்மன் உள்ளிட்ட பரிவார சுவாமிகளுக்கு 108 சங்குகளால் ஆன சிறப்பு தீர்த்தம் ஊற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக சுவாமிக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்து பின்னர் சுவாமிக்கு உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறி தொடர்ச்சியாக தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை காட்டினார்.


 




 


ஆலயத்தில் நடைபெற்ற மண்டல அபிஷேக நிறைவிழாவை காண ஏராளமான  பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்து இருந்தனர்.