கரூர் அருள்மிகு ஸ்ரீ மகா பெரிய காண்டி அம்மன் ஆலய வைகாசி திருவிழாவை முன்னிட்டு கொடுமுடி ஆற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்தம் கொண்டு வந்தனர்.


 




 


சித்திரை, வைகாசி மாதம் என்றாலே பல்வேறு அம்மன் ஆலயங்களில் ஆண்டு திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கமான ஒன்று. இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் பல்வேறு அம்மன் ஆலயங்களில் சிறப்பு திருவிழாக்கள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டம், தும்பிவாடி கிராமம், வெள்ளரிப்பட்டி, பசுபதிபாளையம் பகுதியில் குடிகொண்டு அருள்பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ மகா பெரிய காண்டியம்மன் ஆலய வைகாசி மாத திருவிழாவை முன்னிட்டு கொடுமுடி ஆற்றில் இருந்து ஏராளமான பக்தர்கள் தீர்த்தம் கொண்டு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.


 




 


இந்நிகழ்ச்சியை முன்னிட்டு மகா பெரிய கண்டியம்மன் ஆலயத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கொடுமுடி ஆற்றுக்கு வந்தடைந்தனர். அதை தொடர்ந்து அங்கு புனித நீராடிய பிறகு பக்தர்கள் தங்களது தீர்த்தத்தை குடத்தை கொடுமுடி ஆற்றங்கரை ஓரம் உள்ள விநாயகர் ஆலயத்தில் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.


 




தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் ஏராளமான பக்தர்கள் தீர்த்த குடத்தை தலையில் சுமந்தவாறு கொடுமுடி ஆற்றம் கரையிலிருந்து முக்கிய வீதிகள் வழியாக மகா பெரிய காண்டி அம்மன் ஆலயம் வந்தடைந்தனர். அதை தொடர்ந்து மூலவர் மகா பெரிய காண்டி அம்மனுக்கு, பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. கரூர் மகா பெரிய காண்டி அம்மன் ஆலய வைகாசி மாத திருவிழாவை முன்னிட்டு தீர்த்தம் கொண்டு வரும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழா ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.