கரூர் அலங்காரவல்லி,சௌந்தரநாயகி உடனாகிய கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் எரிபத்தநாயனார் விழாவின் பூக்குடலை திருவிழா வரும் அக்டோபர் 3ஆம் தேதி நடைபெற உள்ளது.





விழாவில் கரூர் மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான  சிவ பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர். விழாவிற்கு உரிய அனுமதி, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்து பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கரூர் ஆர்டிஓ அலுவலகத்தில் நடந்தது. மாநகராட்சி, போக்குவரத்து கழகம், சமூக பாதுகாப்பு அலுவலர், தாசில்தார் சித்த மருத்துவத்துறை, காவல்துறை, போக்குவரத்து காவல்துறை மின்வாரிய அதிகாரிகள், சுகாதாரப்பணிகள், துணை இயக்குனர், தீயணைப்பு துறை, இந்து சமய அறநிலையத்துறை கல்யாண பசுபதீஸ்வரர் கோயில் செயல் அலுவலர் என 14 துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஆலோசனைக் கூட்டத்தில் கரூர் ஆர்டிஓ ரூபினா பல்வேறு அறிவுரைகள் வழங்கினார்.




 


அதன்படி, விழா நடைபெறும் இடம், பக்தர்கள் தங்குமிடம் என்று தேவைப்படும் அனைத்து இடங்களிலும் போலீசார் நியமிக்க வேண்டும் .கோயில் பகுதியில் உள்ள தற்காலிக கடைகளை பக்தர்களுக்கு இடையூறு இன்றி அகற்ற வேண்டும். திருட்டு ,குற்ற சம்பவங்களை நடக்காமல் போலீசார் கண்காணிக்க வேண்டும். போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும். பக்தர்களுக்கு சின்டெக்ஸ் வைத்து குளோரி நேசன் செய்யப்பட்ட குடிநீர் சப்ளை செய்ய வேண்டும். மருத்துவ குழு ஆம்புலன்ஸ் வசதிகள் தயார நிலையில் இருக்க வேண்டும். விழா நாளன்று இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் சுழற்சி முறையில் பணியில் இருக்க வேண்டும். கோயில் மற்றும் விழா நடக்கும் பகுதியில் பக்தர்கள், வயதானவர்கள், கர்ப்பிணி பெண்களை முன்னுரிமை அடிப்படையில் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றார்.




கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நவராத்திரி விழா கொண்டாட்டம்.


தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்கார வள்ளி சௌந்தரனாகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நவராத்திரியை முன்னிட்டு முதல் நாள் நிகழ்ச்சியாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது அதில் பள்ளி மாணவ மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் கொலு பொம்மைகளை பக்தர்கள் வழங்கிய நிகழ்ச்சியும் சிறப்பாக அமைந்தது மேலும் மேட்டு தெரு பகுதியில் உள்ள ஸ்ரீ அபய பிரதான ரங்கநாதர் சுவாமி ஆலயத்திலும் நவராத்திரி முதல் நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது இந்நிகழ்ச்சியைக் காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலய வழி தந்து சிறப்பித்தனர்.