தென்திருப்பதி என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் புரட்டாசி மாத திருவிழாவில் சுவாமி ஆளும் பல்லக்கில் திருவீதி உலா வந்தார்.


 




கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை தென்திருப்பதி என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமணா சாமி ஆலயத்தில் புரட்டாசி மாத திருவிழா கடந்த 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சுவாமி நாள்தோறும் திருவீதி உலாவில் வெவ்வேறு வாகனத்தில் காட்சி தருகிறார். தொடர்ந்து புரட்டாசி மாத தேரோட்டம் நடைபெற்றது. இந்நிலையில் ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமி இன்று ஆளும் பல்லக்கு திருவீதி உலாவில் காட்சி அளித்தார்.


 




ஆளும் பல்லக்கைகாண கரூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி இருந்து ஏராள ஆன்மீக பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.




ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் புரட்டாசி மாத அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்.


தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, சௌந்தரனாகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் மாதம் தோறும் அஷ்டமி சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புரட்டாசி மாத அஷ்டமி பூஜையை முன்னிட்டு கால பைரவருக்கு எண்ணை காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், மஞ்சள், திருமஞ்சள், சந்தனம், விபூதி, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.


 


 




இதனைத் தொடர்ந்து கால பைரவருக்கு ஆலயத்தில் சிவாச்சாரியார் வெண்பட்ட ஆடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்து வடை மாலை சாற்றப்பட்ட பிறகு, பைரவருக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன், மகா தீபாராதனை நடைபெற்றது. மேலும், புரட்டாசி மாத அஷ்டமியை முன்னிட்டு கால பைரவர் சிறப்பு அபிஷேகத்தை காண கரூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் ஆன்மீக பக்தர்கள் கலந்து கொண்டன். புரட்டாசி மாத அஷ்டமி பூஜையின் ஏற்பாட்டை அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்தனர்.