கரூர் தான்தோன்றி மலையில் ஓம் ஸ்ரீ சத்குரு பகவான் பாட்டி சித்தர் ஜீவ சமாதி ஒன்பதாம் ஆண்டு குருபூஜை விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கரூர் தான்தோன்றி மலை பகவான் பாட்டி சித்தர் ஒன்பதாம் ஆண்டு குருபூஜை விழாவை முன்னிட்டு தான்தோன்றி மலை இடுகாட்டில் வைக்கப்பட்டுள்ள பாட்டி சித்தர் சமாதிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ந்து பாட்டி சித்தர் திருவுருவ படத்திற்கு பல்வேறு வண்ண மாலைகள் அணிவித்து பாட்டி சித்தருக்கு பிடித்தமான உணவுகளை வைத்து படையில் இட்டு அதன் தொடர்ச்சியாக பாட்டி சித்த சமாதிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.
பாட்டி சித்தர் 9-ம் ஆண்டு ஜீவசமாதி குருபூஜை விழாவை முன்னிட்டு (இடுகாடு) மயானத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பாட்டி சித்திரை மனமுருகி வழிபட்டனர். அதைத் தொடர்ந்து 100-க்கு மேற்பட்ட தாதர்கள் திருமண மண்டபத்தில் அமர வைத்து பின்னர் பாட்டி சித்தர் புகைப்படத்திற்கு வழிபாடு நடைபெற்ற பிறகு சிறப்பான முறையில் அன்னதானம் நடைபெற்றது.
அதை தொடர்ந்து ஏராளமான பொதுமக்கள் அன்னதானம் பெற்றுக் கொள்ளும் வகையில் பேரிகார்டு அமைக்கப்பட்டு நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் ஒருவரின் ஒருவராக அன்னதானத்தை பெற்று சென்றனர். கரூர் தான்தோன்றி மலை பகுதியில் நடைபெற்ற ஓம் ஸ்ரீ சத்குரு பகவான் பாட்டு சித்தர் 9-ம் ஆண்டு ஜீவ சமாதி குருபூஜை விழாவை முன்னிட்டு இந்த நிகழ்ச்சியை கலந்து கொள்ள கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், திண்டுக்கல், பழனி, வேடசந்தூர், கோவை, சென்னை உள்ளிட்ட பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஓம் ஸ்ரீ சத்குரு பகவான் பாட்டி சித்தர் அறக்கட்டளையின் சார்பாக சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்திருந்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டார்கள் சார்பாக தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் காவி உடை வழங்கி சிறப்பித்தனர்.