கரூர் அருகே ஆத்தூர் கிராமத்தில் பட்டவர் பெரிய பொங்கல் பூஜை விழாவை முன்னிட்டு மாவிளக்கு பூஜை மற்றும் சுவாமி திருவீதி உலா வெகு விமரிசையாக நடைபெற்றது.
கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே உள்ள ஆத்தூர் பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு பட்டவர் சோளியம்மன், முத்து சுவாமி, முனியப்பன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பெரிய பூஜை என்னும் பட்டவர் பொங்கல் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில், முக்கிய நிகழ்வாக 200-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட மாவிளக்கு பூஜை மற்றும் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.
அதனை தொடர்ந்து சுவாமிகளுக்கு வண்ண மாலைகள் அணிவித்து சிறப்பு பூஜை நடைபெற்றது பின்னர் பொங்கல் வைத்து மாவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான ஆண்கள் பெண்கள் சுவாமி ஆடினர். ஆலயத்திலிருந்து மேல தாளங்கள் முழங்க சுவாமி திருவீதி உலா வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆத்தூர் பகுதி முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற திருவீதி உலாவில் பெண்கள் குழந்தைகள் என ஏராளமானோர் நடனம் ஆடினர்.
மூன்று ஆண்டுகளுக்குப் பின் ஆத்தூர் பட்டவர் பெரிய பொங்கல் பூஜை திருவிழா- ஏராளமான பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் கொண்டு வரும் நிகழ்வு.
கரூர் மாவட்டம், மண்மங்கலம், ஆத்தூர் நத்தமேடு பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு பட்டவர், அருள்மிகு சோளி அம்மன், அருள்மிகு முத்து சுவாமி, அருள்மிகு முனியப்பன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பெரிய பூஜை என்று அழைக்கப்படும் பட்டவர் பொங்கல் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
நிகழ்ச்சியை முன்னிட்டு காவிரி ஆற்றில் தீர்த்தம் முத்திரைக்கப்பட்டு தொடர்ச்சியாக ஆத்தூர் பகுதியில் உள்ள பழைய கோவிலில் இருந்து பட்டவர் கோவிலுக்கு மேல தாளங்கள் முழங்க, வான வேடிக்கையுடன் பல்வேறு வீதியில் வழியாக எடுத்துச் சென்றனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆட்டம் பாட்டத்துடன் தீர்த்தத்தை ஆலயம் கொண்டு வந்தனர்.
வெள்ளப்பட்டியில் மழைவேண்டி திருவிளக்கு பூஜை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்.
கரூர் மாவட்டம் தோகைமலை அருகே வெள்ளப்பட்டியில் பொதுமக்கள் சார்பாக மஹாமாரியம்மன் திருக்கோவிலில் 19 ஆம் ஆண்டு 1650 திருவிளக்கு பூஜை நடந்தது. ஆண்டு தோறும் ஆடி மாதத்தில் நடைபெறும் இந்த திருவிளக்கு பூஜையானது விழாக் குழுவினர்களின் ஏற்பாட்டின் படி அனைத்து சமூகத்தினரையும் ஒருங்கிணைத்து நடத்தப்பட்டு வருகிறது. அதேபோன்று இந்த ஆண்டிற்கான திருவிளக்கு பூஜையானது விவசாயம் செழிப்பதற்காக பருவமழை வேண்டுதலுக்காக விழாக்குழுவினர் முடிவு செய்து அறிவித்தனர். பொதுமக்கள் 8 நாட்கள் விரதம் இருந்து வந்தனர். திருவிளக்கு பூஜை இன்று தொடங்கியது. பூஜைக்கு வந்த பெண்கள் ஐந்துமுக பித்தளை குத்துவிளக்குகளை கொண்டு வந்திருந்தனர். பூஜைபொருட்கள் அனைத்தும் விழாக்குழுவினர்களால் வழங்கப்பட்டு 4 கட்டமாக பூஜையை நடத்தினர்.