பூக்களை தவிர்த்து நூதன முறையில், கேனோரி கங்கையம்மனுக்கு கூல்டிரிங்க்ஸ் பாட்டில்களால் அலங்கரிக்கப்பட்டு அம்மன் வீதிஉலா நடந்தது.

 

மாமல்லபுரம் ( Mamallapuram News ) : ஆடி மாதம் என்றாலே அம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகங்கள் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். ஆடி மாதத்தில் சிவனை விட அம்மனுக்கு அதிக விழாக்கள் நடைபெறும். குறிப்பாக கிராம தேவதைகள், சிறு கடவுள்களில் கோவில்களில் ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைப்பது, கூழ்வார்த்தல் உள்ளிட்ட பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும். அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில், ஆடி பிறந்ததில் இருந்து பல்வேறு கோவில்களில் சிறப்பு அபிஷேகங்கள் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.



 

கோனோரி கங்கையம்மன் கோயில்

 

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அண்ணநகர் பகுதியில் உள்ள கோனோரி கங்கையம்மன் கோயில், மிகவும் பழமை வாய்ந்த அம்மன் கோயிலாகும். இக்கோயிலில் வருடந்தோறும் ஆடி மாத திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்தக் கோவிலில் வருடம் தோறும், வீதி உலா வரும் அம்மனுக்கு வித்தியாசமான முறையில், விழாக் குழுவினர் அலங்காரம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.



 

பக்தர்களுக்கு பயன்தரக்கூடிய வகையில் உணவு பொருட்களால், வருடந்தோறும் வித்தியாசமான முறையில் சிந்தித்து அம்மன் அலங்காரத்தை செய்து வருகின்றனர். இதற்கு முன்பு இக்கோயிலில் பிஸ்கட் பாக்கெட், சிப்ஸ் பாக்கெட், சாக்லேட்கள், இனிப்பு பாக்கெட்கள் போன்றவற்றால் அலங்காரம் செய்யப்பட்டு அம்மன் வீதி உலா வந்துள்ளது. வீதி உலா முடிந்து உற்சவர் அலங்காரம் கலைக்கப்பட்டவுடன் பக்தர்களுக்கு பிரித்து அவை வழங்கப்படும். 



 

700 கூல்டிரிங்க்ஸ் பாட்டில்கள் 

 

அதனை சுவாமி வீதி தோறும் சுமந்து பிரசாதம் போல் பக்தர்கள் வாங்கி சாப்பிடுவார்கள். அதேபோல் இந்த வருடமும் பூக்கள் அலங்காரம் தவிர்க்கப்பட்டு விதவிதமான 700 கூல்டிரிங்க்ஸ் பாட்டில்களால் கங்கை அம்மன் அலங்கரிக்கப்பட்டு, சுமங்கலி பெண்கள் பங்கேற்ற 508 பால்குட ஊர்வலம் நடந்தது. அப்போது வித்தியாசமான கோலத்தில் அருள்பாளித்த அம்மனை பக்தர்கள் வழிபட்டனர். சுற்றுலா வந்த மக்கள் பலர் வீதிகளில் செல்லும் போது கூல்டிரிங்ஸ் அலங்கார கோலத்தில், அருள்பாளித்த அம்மனை புகைப்படம் எடுத்து ரசித்ததை காண முடிந்தது.


 





 

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண