சித்திரை மாத திருவிழாவை முன்னிட்டு கரூர் மேட்டு தெரு அமைய பிரதான ரங்கநாதர் சுவாமி ஆலயத்தில் ஏராளமான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.


 


 




 


பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் பல்வேறு கிராம கோயில்களில் திருவிழாக்கள் தேரோட்டங்கள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக சித்திரை மாதங்களில் பெருமாள் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாவட்டம், மேட்டு தெரு பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ அபய பிரதான ரெங்கநாதர் சுவாமி ஆலயத்தில் சித்திரை மாத திருவிழாவை முன்னிட்டு கடந்த 14.04.2024 அன்று கொடியேற்றத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. அதைத் தொடர்ந்து நாள்தோறும் உற்சவர் அபய பிரதான ரெங்கநாதர் சுவாமி பல்வேறு வாகனத்தில் திருவீதி உலா காட்சி தருகிறார்.


 




 


இந்நிலையில் சித்திரை மாத திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவம் நிகழ்ச்சி ஆலய மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. அதை தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டு பின்னர் திருவீதி உலாவும் நடைபெற்றது. மேலும் வேடபுரி என்று அழைக்கப்படும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவியுடன் அபய பிரதான ரெங்கநாதர் சுவாமிக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ச்சியாக மேள தாளங்கள் முழங்க சுவாமிகளை தொளில் சுமந்து வாரு ஆலய வாசலில் இருந்த திருத்தேருக்கு சுவாமி கொண்டு வந்த பிறகு அங்கு சுவாமியை கொலுவிருக்க செய்தனர் .


 


 




 


தொடர்ந்து வான வேடிக்கையுடன் ஆலயத்தில் இருந்து புறப்பட்ட அபய பிரதான ரெங்கநாத ஸ்வாமி மேட்டு தெரு வழியாக தேர்வீதி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயம் சென்று, அதைத்தொடர்ந்து வாங்கள் சாலை, ஐந்து ரோடு, வ உ சி தெரு, ஜகவர் பஜார் உள்ளிட்ட பகுதிகளில் சுவாமி திருத்தேர் பவனி நடைபெற்று அதன் தொடர்ந்து அவளியாக மீண்டும் மேட்டு தெரு வந்து அடைந்தது. தொடர்ந்து ஆலயம் வந்தடைந்த திருத்தேருக்கு ஆலயத்தின் பட்டாச்சாரியார்கள் மகா தீபாராதனை கட்டினர். பின்னர் ஒரு நாள் முழுவதும் திருத்தேரில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அதைத் தொடர்ந்து மாலை வண்டிகால் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. 


 


 




 


கரூர் மேட்டு தெரு அபய பிரதான ரெங்கநாதர் சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற சித்திரை மாத தேரோட்ட நிகழ்ச்சியை காண கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து கோவிந்தா, கோவிந்தா என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை கல்யாண வெங்கட்ரமனசுவாமி ஆலய செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர். நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் தீர்த்தம், மஞ்சள், துளசி உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டு ஆங்காங்கே பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. சித்திரை மாத தேரோட்டத்தை முன்னிட்டு தீயணைப்பு படை வீரர்களும், கரூர் நகர போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.