காஞ்சிபுரம் ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமி ஒட்டி தங்க ரத உற்சவம் விமர்சையாக நடைபெற்றது.
சித்திரை மாத பௌர்ணமி
சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சிபுரம் ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் சித்திரை மாத பௌர்ணமி முன்னிட்டு மூலவர் ஸ்ரீ காமாட்சியம்மன் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். சித்திரை மாத பௌர்ணமி என்பதால் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டத்தில் இருந்து பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பொதுமக்கள் ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் அருள் பெற வேண்டி ஏராளமானோர் வருகை புரிந்து காமாட்சி அம்மனை வழிபட்டு சென்றனர்.
ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் சிறப்பு அபிஷேகங்கள்
மேலும் சித்ரா பௌர்ணமி என்பதால் உற்சவர் ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று குங்கும நிற பட்டு உடுத்தி திருவாபரணங்கள் அணிவித்தும் லட்சுமி, சரஸ்வதி தேவியர்கள், நீல நிற பட்டு உடுத்தி திருவாபரணங்கள் அணிவித்து மாடவீதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தவாறு வீதி உலா வந்து காமாட்சி அம்மன் கோவிலில் தங்கரத உற்சவத்தில் எழுந்தருளி உட்பிரகாரத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்க ரதத்தின் வடம் பிடித்து இழுத்து கோவில் வளாகத்தில் சுற்றி வந்து ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் வழிபட்டு மகா தீபாராதனை காண்பித்து அருள் பெற்றனர்.