ஐப்பசி தேய்பிறை அஷ்டமி; கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவருக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம்.

Continues below advertisement

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற ஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமி பூஜையை காண கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Continues below advertisement

 

 


 

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் வீற்றிருக்கும் கால பைரவருக்கு ஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு கால பைரவருக்கு எண்ணை காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, அரிசி மாவு, விபூதி, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

 

 


அதன் தொடர்ச்சியாக ஆலயத்தில் சிவாச்சாரியார் காலபைரவருக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்து பின்னர் எலுமிச்சம் கனி மாலையால் அலங்கார நடைபெற்றது. பிறகு சுவாமிக்கு உதிரி பூக்களால் நாமாவளிகள் கூறிய பின்னர், தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய் வைத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் பல்வேறு சோடச்ச உபச்சாரங்கள் நடைபெற்ற பிறகு சுவாமிக்கு பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.

 

 


கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற ஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமி பூஜையை காண கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக சிறப்பாக செய்தனர் .

 

 


 

ஐந்து ரோடு பாலாம்பிகா சமேத கோடீஸ்வரன் ஆலயத்தில் ஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம்.


ஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பல்வேறு பைரவர் ஆலயங்களில் சிறப்பு அபிஷேக அலங்கார நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ஐந்து ரோடு பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகா சமேத கோடீஸ்வரன் ஆலயத்தில் வீற்றிருக்கும் பைரவருக்கு ஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமி பூஜை சிறப்பாக நடைபெற்றது.

 


இந்நிகழ்ச்சியை முன்னிட்டு பைரவருக்கு எண்ணைக்காப்பு சாற்றி,பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய்,இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, அரிசி மாவு, விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக பைரவருக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்து வடமாலை சாற்றப்பட்டு, சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூரம் ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.

 


கரூர் ஐந்து ரோடு அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகா சமேத கோடீஸ்வரன் ஆலயத்தில் நடைபெற்ற ஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமி சிறப்பு அபிஷேக நிகழ்ச்சியை காண ஏராளமான பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்தனர்.

Continues below advertisement
Sponsored Links by Taboola