தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் புரட்டாசி மாத பெரும் திருவிழாவை முன்னிட்டு இறுதி நிகழ்ச்சியான புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.


 


 




தென் திருப்பதி என்று அழைக்கப்படும் தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் கடந்த 01.10.2024 அன்று முதல் இன்று 23.10.2024 புதன்கிழமை வரை சுவாமி ஆலயத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனொரு பகுதியாக கடந்த 04.10.2024 வெள்ளிக்கிழமை கொடியேற்ற நிகழ்ச்சியும்,


 




 


அதை தொடர்ந்து 06.10.2024 ஞாயிற்றுக்கிழமை வெள்ளி அனுமன் வாகன திருவீதி உலாவும், 07.10.2024 திங்கட்கிழமை வெள்ளி கருட வாகனமும், 10.10.2024 வியாழக்கிழமை சுவாமிக்கு திருக்கல்யாணமும் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக 11.10.2024 வெள்ளிக்கிழமை குதிரை வாகன திருவீதி உலாவும் நடைபெற்றது. 


 




 


மேலும் புரட்டாசி மாதத்தில் முக்கிய நாளான 12.10.2024 சனிக்கிழமை புரட்டாசி மாதத்தில் தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அதை தொடர்ந்து 15.10.2024 செவ்வாய்க்கிழமை வெள்ளி கருட வாகன திருவீதி உலாவும், அதை தொடர்ந்து 19.10.2024 சனிக்கிழமை வெள்ளி அனுமன் வாகனத்தில் வீதி உலாவும், 20.10.2024 ஞாயிற்றுக்கிழமை வெள்ளி கருட வாகன திருவீதி உலாவும், 21.10.2024 திங்கட்கிழமை முத்து பல்லாக்கு திருவீதி உலாவும், 22.10.2023 செவ்வாய்க்கிழமை ஆளும் பல்லாக்கு திருவீதி உலாவும் நடைபெற்றது.


 




 


இந்த நிலையில், நேற்று இறுதி நிகழ்ச்சியாக 23.10. 2024 புதன்கிழமை தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ வெங்கட்ரமணசுவாமி ஆலயத்தில் உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமிகளுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக மாலை ஆலய மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன், கல்யாண வெங்கடரமணசுவாமிகளை கொலுவிருக்க செய்தனர். அதைத்தொடர்ந்து சுவாமிக்கு பல்வேறு வண்ண மாலைகள் அணிவித்து தொடர்ச்சியாக பட்டாச்சாரியார் பிரத்தியேக யாக குண்டங்கள் அமைத்து யாக வேள்வி நடத்தினார்.


 




அதைத்தொடர்ந்து பக்தர்கள் வழங்கிய சம்பங்கி, மல்லிகை, முல்லை, செவ்வந்தி, அரலி, துளசி உள்ளிட்ட பல்வேறு வகையான வாசனை பூக்களால் சுவாமிகளுக்கு ஆலய பட்டாச்சாரியார்கள் ஒன்று சேர்ந்து வண்ண பூக்களால் வேள்வி நடத்தினர். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற வண்ண பூக்கள் வேள்வி நிறைவு பெற்றது .


 


 




 


அதன் தொடர்ச்சியாக ஆலயத்தின் பட்டாச்சாரியார் ஸ்ரீதேவி, பூதேவி உடனாகிய கல்யாண வெங்கட்ரமண ஸ்வாமிக்கு தூப தீபங்கள் காட்டி, தொடர்ச்சியாக சுவாமிக்கு நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. அதை தொடர்ந்து கூடியிருந்த பக்தர்களுக்கு தீர்த்தம், துளசி, மஞ்சள் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டு பக்தர்களுக்கு சடாரிகள் சாட்டப்பட்டது. 


 





ஆலயத்தில் நடைபெற்ற புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியை காண கருர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் தான்தோன்றி மலை அருள்மிகு கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயம் வருகை தந்து சிறப்பு நிகழ்ச்சியை கண்டு களித்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக சிறப்பாக செய்தனர்.