கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி பகுதியில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஆண்கள், சிறுவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


 




கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி பகுதியில் ரம்ஜான் பண்டிகையையொட்டி ஈத்கா திடல் என்ற காலி மைதானத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர். ஏராளமான இஸ்லாமியர்கள் பெருநாள் திடல் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். பெருநாள் சிறப்பு தொழுகை முடிந்து இஸ்லாமியர்கள் ஒருவொருக்கொருவர் கட்டியணைத்து கைகொடுத்தும், ரம்ஜான் வாழ்த்துகளை பகிர்ந்துகொண்டனர்.


 




 


ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் 30 நாட்கள் முஸ்லிம்கள் நோன்பு இருந்து அல்லாவை மனம் உருகி வழிபடுவர். நோன்பின் முடிவில் ஈகை திருநாளான ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் ரம்ஜான் பண்டிகையையொட்டி பள்ளப்பட்டி ஈத்கா பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் பெரும் மக்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை ஈடுபட்டனர்.