தமிழ்நாட்டில் இன்று ரமலான் பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் என்னென்ன வாழ்த்துகளை அனுப்பலாம் என பார்க்கலாம். 


ரமலான் பண்டிகை 2024


இஸ்லாமிய மக்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்று ரமலான். இதனை ரம்ஜான் அல்லது ஈகை பெருநாள் என்றும் அழைப்பர். இஸ்லாமிய நாட்காட்டியின் 9வது மாதம் இந்த பண்டிகையானது கொண்டாடப்படுகிறது. முகமது நபிக்கு முதன்முதலாக குரானை வெளிப்படுத்திய மாதம் என்பதால் இந்த ஒரு மாத காலம் நோன்பு கடைபிடிக்கப்படுகிறது. அமாவாசை தொடங்கி மறு அமாவாசை முடிந்து பிறை தென்படும் நாள் ரமலான் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. சூரியன் உதிப்பதில் இருந்து மறைவு வரை உணவு, நீராகாரம் எடுக்காமல் தன்னடக்கம், உணவுக்கட்டுப்பாடு, நாவடக்கம், சமூக நலன் பேணுதல் போன்ற பண்புகள் இந்த நோன்பு காலக்கட்டத்தில் இஸ்லாமிய மக்களிடையே வளர்க்கப்படுகிறது. 


இந்த புனிதமான ரமலான் நாளில் உங்களுடைய நண்பர்களுக்கும், குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவிக்கலாம்.


வாழ்த்து சொல்லி மகிழுங்கள்



  • இந்த புனித ரமலான், உங்களை மட்டுமல்லாமல் உங்கள் குடும்பத்தினரையும் அமைதி, மகிழ்ச்சி மற்றும் செழிப்புடன் நிரப்பட்டும். 

  • இந்த ஈகை திருநாளில் அல்லாஹ்வின் வழிகாட்டுதலும் ஆசீர்வாதங்களும் உங்கள் பாதையை ஒளிரச் செய்து உங்கள் கனவுகளை நிறைவேற்றட்டும். 

  • இந்த புனிதமான நேரத்தில் உங்கள் ஆசைகள் மற்றும் கனவுகள் அனைத்தையும் அல்லாஹ் நிறைவேற்றுவார். ஈகை பெருநாள் வாழ்த்துகள்.

  • ரமலான் தினத்தில் வலிகள் தேய்பிறையாய் தேய்ந்து வாழ்வில் வசந்தம் வளர்பிறையாய் வளரட்டும்! - உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் வாழ்த்துகள்!

  • பிறைகண்ட பெருநாள் கொண்டாடும் இந்த புனித நாளில் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் அன்பும், மகிழ்ச்சியும் பரவட்டும்!

  • வானத்தில் தோன்றும் பிறை உங்கள் வாழ்க்கையில் புதிய தொடக்கங்களையும், ஆசீர்வாதங்களையும் கொண்டு வரட்டும்! - ரமலான் வாழ்த்துகள்!

  • அல்லாஹ் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும், செல்வத்தையும் நிரப்பி இந்த ரமலான் நாளில் நல்ல நினைவுகளை விட்டுச் செல்லட்டும்!

  • வாழ்க்கை எவ்வளவு கடினமாக இருந்தாலும் ரமலான் நாள் அதனை மாற்றி உங்கள் குடும்பத்தினரை மகிழ்ச்சியில் ஆழ்த்த அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன்!

  • அன்பு, இரக்கம், பொறுமை மற்றும் மகிழ்ச்சி ஆகியவற்றின் இணைப்பான ரமலான் மாதம் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் தருவதாக!

  • May the auspicious occasion of Ramadan Kareem bring to all of us many more joys and celebrations - Happy Eid Mubarak!