கரூர் அன்ன காமாட்சி அம்மன் 100-ம் ஆண்டு திருவிழா முன்னிட்டு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
கரூர் மாநகரம் பேருந்து நிலையம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற அன்ன காமாட்சி அம்மன் கோவிலில் அறங்காவலர் குழு மற்றும் நிர்வாக குழு சார்பில் நூறாம் ஆண்டு திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்ற. அன்ன காமாட்சி அம்மன் ஆலயத்தில் நேற்று தொடங்கிய திருவிழாவில் கோவிலில் உள்ள உட்பிரகாரம் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து கரூர் அமராவதி ஆற்றில் இருந்து கரகம் பாலித்து கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து இன்று நடைபெற்ற திருவிழாவில் கரூர் மாநகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்ற பூக்குழி இறங்கி பக்தர்கள் வழிபட்டனர். இந்த பூக்குழி நிகழ்ச்சியில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை கையில் ஏந்தியவாறு பூக்குழி இறங்கி காணிக்கை செலுத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கரூர் மாநகர் பகுதியில் முக்கிய வீதிகளில் சுவாமி திருவிதி உழா நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்