கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆனி மாத சனி பிரதோஷ விழா
கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆனி மாத சனி பிரதோஷ விழா ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
தென் தமிழகத்தில் புகழ்பெற்ற ஆலயத்தின் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சவுந்தர்நாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆனி மாத சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், விபூதி, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதை தொடர்ந்து நந்தி பகவானுக்கு பட்டாடை உடுத்தி , வெள்ளிக் கவசம் சாத்தப்பட்டு, வண்ண மாலைகள் அணிவித்தனர். பின்னர் ஆலயத்தில் சிவாச்சாரியார் நந்தி பகவானுக்கு உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறிய பிறகு சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய் வைத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆனி மாத சனி பிரதோஷ விழாவை காண கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய செயல் அலுவலர் உள்ளிட்ட பணியாளர்கள் சார்பாக சிறப்பாக செய்தனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்