கன்னியாகுமரி மாவட்டத்தில் புனித சவேரியார் ஆசி பெற்ற கடற்கரை கிராமங்களில் ஒன்றான பள்ளம் துறை கடற்கரை கிராமத்தில் நூற்றாண்டுகளைக் கடந்த  தூய மத்தேயூ தேவாலய திருவிழா  திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் புனித சவேரியாரின் ஆசி பெற்ற பல்வேறு கடற்கரை கிராமங்களில் பள்ளம் துறை கடற்கரை  கிராமமும் ஒன்று , இந்த கிராமத்தில் உள்ள தூய மத்தேயூ  தேவாலயம் நூற்றாண்டுகளை கடந்த தேவாலயம். இந்த தேவாலயத்தில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையிலே இந்த ஆண்டுக்கான திருவிழா  திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதை தொடர்ந்து திருப்பலிகளும் சிறப்பு பிரார்த்தனைகளும் நடைபெற்றன. கோட்டார் மறைமாவட்ட பேராயர்  நஸ்ரேன் சூசை தலைமையில் திருபலிகள் நடைபெற்றது.  தேவாலயத்தின் திருக்கொடியேற்று நிகழ்ச்சியில் குமரி மாவட்டத்தின் கடற்கரை கிராம மக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.




கடந்த ஆண்டு நூற்றாண்டு விழா கொண்டாட இருந்த நிலையில் கொரோனா காலகட்டம் என்பதால் விழாக்கள் நடத்த முடியவில்லை எனவே இந்த திருவிழாவோடு நூற்றாண்டு விழா கொண்டாட்டமும் இணைத்து கொண்டாடப்படுவதாக தேவாலயத்தின் அருள்பணியாளர் சூசை ஆற்றனி  தெரிவித்தார். பள்ளம் துறை தேவலையாத்தில் திருவிழா துவங்கியாதல் குமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை கிராமங்கள் விழா கோலம் பூண்டது.


 




 


பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் ஆவணி திருவிழா நேற்று சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது. இதில் குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான பெண் பக்தர்கள் வருகை தந்தனர். மூன்று நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் முக்கிய விழாவான 5001 பொங்கல் வழிபாடு நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது.

 



 

பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகின்ற கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறுகின்ற முக்கிய விழாக்களில் ஆவணி திருவிழா மூன்று நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ஆவணி திருவிழா நேற்று சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது. காலையில் கணபதி ஹோமத்துடன் தொடங்கிய இந்த விழா பின்னர் உற்சவமூர்த்திக்கு பஞ்சாபிஷேகம், உஷ பூஜை, பஜனை சுமங்கலி பூஜை, அத்தாழபூஜைகளும் நடைபெற்றது. மூன்று நாள் திருவிழாவில் முக்கிய விழாவான பொங்கல் வழிபாடுகள் இன்று நடைபெற்று வருகிறது. ஆவணி திருவிழாவின் இறுதி நாளான இன்று  திருவிளக்கு பூஜையும் அத்தழா பூஜையுடன் ஆவணி திருவிழா நிறைவு பெற உள்ளது. ஆவணி திருவிழா பண்டிகை முன்னிட்டு குமரி மாவட்டம் மட்டுமல்ல தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலுக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்