Mahalaya Amavasya 2022: இந்த ஆண்டு மகாளய அமாவாசை எப்போது? தேதி, நேரம் குறித்த தகவல்கள் இதோ..

Mahalaya Amavasya 2022 Date and Time: இந்த ஆண்டு மகாளய அமாவசை எப்போது எனவும், அன்று செய்ய வேண்டிய சடங்குகள் குறித்தும் இந்த தொகுப்பில் காணலாம்.

Continues below advertisement

Mahalaya Amavasya 2022: புரட்டாசி மாதத்தில் பித்ரு பக்ஷ அல்லது பித்ரிபக்ஷத்தின் கடைசி நாள் (மூதாதையர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 16 நாட்கள்) மஹாளய அமாவசை என்று அழைக்கப்படுகிறது. இந்த நாள் அமாவாசை அன்று அனுசரிக்கப்படுகிறது.  இது கிருஷ்ண பக்ஷத்தின் முடிவைக் குறிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் துர்கா தேவி பூமிக்கு வருவதாக இந்துக்கள் நம்புகிறார்கள். மேலும், இந்த மத முக்கியத்துவம் வாய்ந்த நாள் மேற்கு வங்காளத்தில் 10 நாள் வருடாந்திர துர்கா பூஜை திருவிழா கொண்டாடப்படுகிறது. சர்வ பித்ரா அமாவாசை என்றும் குறிப்பிடப்படும் மகாளய அமாவசை இந்த ஆண்டு செப்டம்பர் 25 அன்று கொண்டாடப்படுகிறது.

Continues below advertisement

பித்ரிபக்ஷாவின் கடைசி நாள் இறந்த குடும்ப உறுப்பினர்களுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. மக்கள் தர்ப்பணம், முன்னோர்களுக்கு பிரசாதம் வழங்கும் சடங்கு போன்றவை நடைபெறுகிறது. கங்கை அல்லது வேறு ஏதேனும் புனித நதியில் நீராடிய பிறகே இந்த சடங்கு நடத்தப்படுகிறது. மேற்கு வங்கத்தில் வசிப்பவர்களுக்கு, மகாளய அமாவசை சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. மக்கள் சூரிய உதயத்திற்கு முன் எழுந்து துர்கா தேவியை தங்கள் வீட்டிற்குள் வரவேற்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்கிறார்கள். மகாளய அமாவசையில், மக்கள் மகிஷாசுரமர்த்தினி இசையை விரும்பி கேட்கிறார்கள்.

மஹாளய அமாவசை 2022:

பிரம்ம முகூர்த்தம் காலை 4:35 முதல் 5:23 வரையிலும், அபிஜித் முகூர்த்தம் காலை 11:48 முதல் மதியம் 12:37 வரையிலும் தொடங்குகிறது. கோதுளி முகூர்த்தம் மாலை 6:02 முதல் 6:26 மணி வரையிலும், விஜயா முகூர்த்தம் பிற்பகல் 2:13 முதல் பிற்பகல் 3:01 மணி வரையிலும் வரும்.

மஹாளய அமாவசை முக்கியத்துவம்: 

முன்னோர்களை வழிபாடு செலுத்துவதைத் தவிர, உண்மை மற்றும் தைரியத்தின் சக்தி மற்றும் தீமையை வெல்லும் நன்மையை முன்னிலைப்படுத்தவும் இந்த நாள் நினைவுகூறப்படவே அனுசரிக்கப்படுகிறது. இந்து புராணங்களின்படி, பூமியில் அழிவை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் மகிஷா அசுரன் என்ற அரக்கனைக் கொல்ல அனைத்து உயர்ந்த தெய்வங்களின் சக்திகளால் துர்கா தேவி உருவாக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

வருடம் முழுவதும் ஒவ்வொரு மாதமும் அமாவாசையில் முன்னோர்களை வழிபட்டாலும் மகாளய அமாவாசை நாளில் வழிபடுவது மிகவும் புண்ணியமாக கருதப்படுகிறது. ஒரு ஆண்டில் உள்ள பன்னிரண்டு அமாவாசைகளில்  புரட்டாசி அமாவாசை, ஆடி அமாவாசை, தை அமாவாசை ஆகிய மூன்று அமாவாசைகளும் முக்கியமானவையாக இந்துக்களால் நம்பாடுகிறது.  இவற்றில்புரட்டாசி அமாவாசை  இறந்த முன்னோர்கள் பூலோகத்திற்கு வந்து தங்கியிருக்கும் தினம் எனவும் நம்பபடுகிறது.  எனவே அந்த நாளில் தவறாமல் அவர்களை நினைத்து வழிபட வேண்டும் என்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். வாய்ப்பு உள்ளவர்கள் அருகில் உள்ள நீர் நிலைகளுக்குச் சென்று முறைப்படித் தர்ப்பணம் செய்வது நல்லது எனவும் நம்பப்படுகிறது. அவ்வாறு நீர் நிலைகளுக்குச் செல்ல முடியாதவர்கள் அவரவர்கள் வீட்டிலேயே படையல் போட்டு வழிபட வேண்டும் . மகாளய அமாவாசை அன்று வழிபட்டால் ஆண்டு முழுவதும் அமாவாசையில் வழிபாடு செய்த புண்ணியம் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக இருக்கிறது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola