காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மிக முக்கிய திருவிழாக்களில் ஒன்றாக கருதப்படும்,  நடவாவி கிணறு உற்சவம் வருகின்ற 23ஆம் தேதி நடைபெற உள்ளது .


நடவாவி உற்சவம் ( Nadavavi urchavam 2024 )


அத்தி வரதர் புகழ்பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் சித்ரா பௌர்ணமி வெகு சிறப்பாக கொண்டாடப்படும். வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து புறப்படும் வரதர், அந்த திருநாளில் யாகம் வளர்த்து நெருப்பாலும், நடவாவி கிணற்று நீராலும், பாலாற்றங்கரையில் காற்றாலும் அபிஷேகம் செய்யப்பட்டு, மீண்டும் வரதராஜ பெருமாளை ஆலயத்திற்கு கொண்டு வருகின்றார்கள். மிகவும் பிரசித்தி பெற்ற இந்த உற்சவத்தை ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கண்டு வரதர் அருள் பெறுவார்கள்.


இந்த ஆண்டு திருவிழா


அந்த வகையில் இந்த ஆண்டு சித்ரா பௌர்ணமி முன்னிட்டு  நடவாவி உற்சவம் நடைபெற உள்ளது.  முன்னதாக  சித்திரை 09 ( 22-04- 2024 )  திருவவதார உற்சவம் நடைபெற உள்ளது.  இந்த உற்சவத்தின் பொழுது விடியற்காலை மூன்று மணிக்கு திருமஞ்சனம் கொண்டு வந்து,  பெருமாளுக்கு    திருவாராதனை  நிவேதனம் செய்யப்பட்டு,  பெருமாள் திருமலையில் இருந்து  இறங்குதல் மற்றும் பெருமாள் புண்ணியகோடி விமானத்தில் புறப்படுதல்  விழா நடைபெறும் இரவு 7:30 மணிக்கு பெருமாள் திருக்கோவிலுக்கு   எழுந்தருளி கண்ணாடி அறையில் தரிசனம் தருவார். தொடர்ந்து இரவு 9 மணி அளவில் பெருமாள் திருக்கோவில் இருந்து மாடவீதி புறப்பாடு  நடைபெறும்.


 அடுத்த நாள் நள்ளிரவு


நள்ளிரவு ஒரு மணி அளவில் பெருமாள் செவிலிமேடு  கிராமங்களில் வீதி உலா நடைபெறும். தொடர்ந்து காலை 6 மணி அளவில் புஞ்சையரசந்தாங்கல் கிராம மண்டகப்படி  நிகழ்ச்சி நடைபெறும். இதனைத் தொடர்ந்து வாகை கிராம மண்டகப்படி நிகழ்ச்சியும்,  தூசி கிராமத்திற்கு வீதி புறப்பாடும் நடைபெறும். தொடர்ந்து 23-ஆம் தேதி மதியம் ஒரு மணி அளவில்  தூசி கிராம ஸ்ரீ வைகுண்ட பெருமாள் கோவிலில்,  சுவாமி ஓய்வு எடுப்பார். மீண்டும் புறப்பட்டு நான்கு மணி அளவில் அப்துல்லாபுரம் மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெற்று, அயங்கார் குளத்திற்கு எழுந்தருளி கிராம வீதி புறப்பாடு நடைபெறும்.  இரவு 7 மணி அளவில் பெருமாள் ஐயங்கார் குளம் ஸ்ரீ சஞ்சீவிராயர் கோவில்  இறங்குதல் நடைபெறும் , தொடர்ந்து திருமஞ்சனம் நிகழ்ச்சியும் நடைபெறும்.


நடவாவி கிணறு


தொடர்ந்து இரவு 9 மணி அளவில்,  சஞ்சீவ ராயர் திருக்கோவிலிலிருந்து நடவாவி கிணற்றுக்கு புறப்பாடு நடைபெறும்.  ஒன்பது முப்பது மணி அளவில் பெருமாள்  நிகழ்ச்சி   நடைபெற உள்ளது.  தொடர்ந்து இரவு 10 மணி அளவில்  நடவாவி கிணற்றில் இருந்து பாலாற்றுக்கு எழுந்தருள் உள்ள நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து 24-ஆம் தேதி நள்ளிரவு 1 மணி அளவில்,  பாலாற்றில் எழுந்தருளி செவிலியமேடு  வீதி மண்டகப்படி நிகழ்ச்சியும்,  பங்காரு காமாட்சி காலணி மண்டக படியும் நடைபெறும்.


விடியற்காலை 3 மணியளவில் பெருமாள்  தேசிகன் சன்னதிக்கு எழுந்தருளி காட்சி தருவார்.  4 மணியளவில் திரு கோவிலுக்கு எழுந்தருளி   திருமுற்றவெளி நான்கு கால மண்டபத்தில்  இறங்குதல் நிகழ்ச்சி நடைபெறும்.  இதனைத் தொடர்ந்து  மதுரகவிகள் சாத்துமுறை நடைபெறும்.


 இறுதி நாள் உற்சவம்


தொடர்ந்து 25-ஆம் தேதி  தோட்ட உற்சவம் நடைபெற உள்ளது.  பெருமாள் திருக்கோவில் இருந்து பல்லாக்கில் மாட வீதியாக தோட்டத்திற்கு புறப்படும்,  நடைபெற உள்ளது.  தொடர்ந்து 26-ஆம் தேதி வெள்ளிக்கிழமை, ஸ்ரீ பெருமாள் தோட்டத்திலிருந்து திருக்கோவில் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெறும்.  பெருமாள் திருக்கோவிலுக்கு எழுந்தருளி  திருமுற்றவெளி  நான்கு கால் மண்டபத்தில் எழுந்தருளி  காட்சி தருவார்.  


தொடர்ந்து பெருமாள் கண்ணாடி அறைக்கு எழுந்தருளுதல்  நிகழ்ச்சி நடைபெறும்.  26-ஆம் தேதி  இரவு 7 மணி அளவில்  கண்ணாடி அறையில் இருந்து பெருமாள் திருமலைக்கு  புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்று  உற்சவத்தில் நிறைவு பகுதி வந்தடையும்.