தும்பவனத்தம்மன் கோவிலில் ஆவணி மாத பௌர்ணமி & ஆவணி அவிட்டம்  ஒட்டி ஊஞ்சல் சேவையில் தும்பவனத்து அம்மன்  பக்தர்களுக்கு காட்சியளித்தார்.


காஞ்சிபுரம்  தும்பவனத்து அம்மன் திருக்கோவில் - Kanchipuram Thumbavanathamman Temple


காஞ்சிபுரம் ( Kanchipuram News ) : காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட தும்பவனம் பகுதியில் உள்ள கிராம தேவதையான தும்பவனத்தம்மன் ஆலயம் உள்ளது. இந்த தும்பவனத்தம்மன் ஆலயம் பல்வேறு  பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு குலதெய்வமாக விளங்கி வருகிறது.



காஞ்சிபுரம்  தும்பவனத்து அம்மன் திருக்கோவில் - ஆவணி மாத பௌர்ணமி மற்றும் ஆவணி அவிட்டம் ஒட்டி சிறப்பு பூஜை


 


தும்பவனத்தம்மனுக்கு ஆவணி மாத பௌர்ணமி  மற்றும் ஆவணி அவிட்டம் ஒட்டி சிறப்பு கலச பூஜை நடைபெற்றது. முன்னதாக கலச பூஜைக்கான புனித நீர் கொண்டுவரப்பட்டு, புனித நீர் பூஜிக்கப்பட்டு, பின்னர் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இன்று ஆவணி அவிட்டம் மற்றும் பௌர்ணமி என்பதால் வழக்கத்தை விட, பக்தர்கள் அதிக அளவு அம்மன் கோவிலுக்கு வந்திருந்தனர்.



காஞ்சிபுரம்  தும்பவனத்து அம்மன் திருக்கோவில் - ஆவணி மாத பௌர்ணமி மற்றும் ஆவணி அவிட்டம் ஒட்டி சிறப்பு பூஜை


 


பின்பு   தும்பவனத்தம்மனுக்கு பால், தேன், இளநீர், சந்தனம்,தயிர், பல்வேறு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு  தும்பவனத்தம்மன் வெள்ளி உற்சவத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். கோவில் வளாகத்தில் ஆவணி மாத பௌர்ணமி மற்றும் ஆவணி அவிட்டம் ஒட்டி  தும்பவனத்தம்மன் ஊஞ்சலில் சேவையில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.



காஞ்சிபுரம்  தும்பவனத்து அம்மன் திருக்கோவில் - ஆவணி மாத பௌர்ணமி மற்றும் ஆவணி அவிட்டம் ஒட்டி சிறப்பு பூஜை


இதில் ஏராளமான பக்தர்கள் ஊஞ்சல் சேவையில் காட்சி அளித்த தும்பவனத்தம்மனை தரிசனம் செய்து சென்றனர். விழாவிற்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். இதேபோல் காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு அம்மன் கோவில்களில் பௌர்ணமி விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு தரிசனம் நடைபெற்றது.



காஞ்சிபுரம்  தும்பவனத்து அம்மன் திருக்கோவில் - ஆவணி மாத பௌர்ணமி மற்றும் ஆவணி அவிட்டம் ஒட்டி சிறப்பு பூஜை


 


இதேபோன்று, காமாட்சி அம்மன் லக்ஷ்மி சரஸ்வதியுடன் பச்சை நிற பட்டுடுத்தி பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பல்வேறு ஆபரணங்கள் உடுத்தி நான்கு ராஜ வீதி வழியாக வலம் வந்து பின் கோவிலின் உட்பிரகாரத்தில் தங்க தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஆவணி அவிட்டம் மற்றும் ஆவணி பௌர்ணமி ஒட்டி நடைபெற்ற சிறப்பு தங்க தேர் பவனியை திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.