ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான பக்தர்கள் பிரார்த்தனை செய்ய வருகை தரும் கோயில்கள் இந்தியா முழுவதும் நிரம்பியுள்ளது. நாட்டில் உள்ள ஒவ்வொரு கோயிலும் பல நம்பிக்கைகளைத் தாங்கி நிற்கின்றன. அதில் மேலும் சில கோயில்கள் வினோதமான கதைகளையும் கொண்டுள்ளன. இந்தியாவின் மிக மர்மமான ஐந்து கோவில்கள் பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.


மெஹந்திபூர் பாலாஜி கோவில்


ராஜஸ்தானின் தௌசாவில் அமைந்துள்ள மெஹந்திபூர் பாலாஜி கோயில் பூசாரிகள் பேயோட்டுவார்கள் என்று கூறப்படுகிறது. இந்த கோயில் அதற்கு தான் பிரபலமும் கூட. மக்கள் தங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களை தீய சக்திகளின் பிடியில் இருந்து விடுவிக்க இந்த கோயிலுக்கு வருகிறார்கள். இங்கு வரும் மக்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் வித்தியாசமாக செயல்படுவதால், முழுச் சூழலும் அமானுஷ்யம் நிறைந்ததாகவே இருக்கிறது. இந்துக் கடவுளான ஹனுமான் இந்தக் கோயிலில் வழிபடப்படுகிறார்.



அனந்தபத்மநாப ஏரி கோவில்


கேரளாவில் ஒரு ஏரியின் நடுவில் இக்கோயில் அமைந்துள்ளது. அனந்தபத்மநாபா கோவிலை ஒரு முதலை பாதுகாக்கிறது. ஆனால் அந்த முதலை எந்த மனிதரையும் தாக்காது. மாமிசம் உண்ணாமல் அந்த முதலை வளர்ந்து வருகிறது. வேட்டையாடும் இந்த விலங்கு சைவ உணவைப் பின்பற்றி வருகிறது. பாபியா என்ற பெயர் கொண்ட அந்த முதலை 70 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த குளத்தில் வசித்து வந்த நிலையில், கடந்தாண்டு உயிரிழந்தது. 9 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அந்த கோயிலில் விஷ்ணுவின் 10 அவதாரங்களை சித்தரிக்கும் மர வேலைப்பாடுகள் உள்ளன.


தொடர்புடைய செய்திகள்: MS Dhoni: தங்கம்யா.. அந்த மனுஷன் தோனி! - பொங்கிய மத்திய பாதுகாப்பு படை அதிகாரி - வைரலாகும் கடிதம்..!


காமாக்யா தேவி கோவில்


குவாகத்தியில் அமைந்துள்ள இந்த காமக்யா தேவி கோயில் இந்தியாவில் மிகவும் சக்திவாய்ந்த கோயிலாகும். இது பெண்மை மற்றும் மாதவிடாயை குறிக்கும் ஒரு கோயில் ஆகும். இக்கோயிலின் அம்மன் ஆண்டுதோறும் மழைக்காலத்தில் இரத்தம் சிந்துவதாக நம்பப்படுகிறது. பல நூற்றாண்டுகள் பழமையான இந்த கோவில் இந்தியாவில் உள்ள 51 சக்தி பீடங்களில் ஒன்றாகும். அம்மனின் மாதவிடாய் சுழற்சியின் போது, நீருக்கடியில் உள்ள நீர்த்தேக்கம் சிவப்பு நிறமாக மாறும் என்றும், இந்த நேரத்தில் கோவில் மூடப்பட்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.



சூரியக் கோவில்


கோனார்க்கின் சூரியக் கோவில் ஒரு கட்டிடக்கலை அதிசயம். இது நரசிம்ம மன்னரின் ஆட்சியின் போது கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. சூரிய ஒளியின் முதல் கதிர்கள் பிரதான நுழைவாயிலில் விழுவதாக கூறுகிறார்கள். கோவிலின் வடிவமைப்பு அவ்வாறு உள்ளதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.


கைலாஷ் கோவில்


கைலாஷ் கோயிலும் கட்டிடக்கலைக்கு பெயர் போன ஒரு கோயில். 16 ஆம் நூற்றாண்டின் எல்லோரா குகைகளில் பாறையால் வெட்டப்பட்ட கைலாஷ் கோயில் ஒரே பாறையில் கட்டப்பட்டுள்ளது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, அங்குள்ள சுமார் 30 மில்லியன் சமஸ்கிருத சிற்பங்கள் இன்னும் டிகோட் செய்யப்படவில்லை என்று தெரிகிறது.