காஞ்சிபுரத்தில் அழகிய சிங்கப்பெருமாள் ஆலயத்தில் ஆடி மாத ஏகாதசி உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

 

காஞ்சிபுரம் ( Kanchipuram News ) : ஆடி மாத சுக்ல பட்ச துவாதசியில், மகாவிஷ்ணுவை நினைத்து விரதம் மேற்கொண்டால், நினைத்ததெல்லாம் நடக்கும், கேட்டதெல்லாம் கிடைக்கும் என்பது ஐதீகம். தட்சிணாயினத்தின் முதல் ஏகாதசியாக வருவது 'தேவசயனி ஏகாதசி என அழைப்பது வழக்கம். ஆடி மாத சுக்ல பட்ச துவாதசியில், மகாவிஷ்ணுவை நினைத்து விரதம் மேற்கொண்டால், நினைத்ததெல்லாம் நடக்கும், கேட்டதெல்லாம் கிடைக்கும் என்பது ஐதீகம்.



 

அழகிய சிங்கப்பெருமாள் ஆலயம்  ( Sri Tiruvelukkai Sri Azhagiya SingaPerumal Temple )

 

 பல்வேறு சிறப்புகளை வாய்ந்த ஆடி மாத ஏகாதசி   நாளை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு விஷ்ணு ஆலயங்களில், உற்சவங்கள் மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.  அந்த வகையில் காஞ்சிபுரத்தில் பழமை வாய்ந்த கோவிலான  அழகிய சிங்கப்பெருமாள் கோவிலிலும்  ஏகாதசி உற்சவம் நடைபெற்றது. 



காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவேளுக்கை ஸ்ரீ அழகிய சிங்கப்பெருமாள் ஆலயத்தில் ஆடி மாத ஏகாதசி உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. இதனை ஓட்டி உற்சவர் ஸ்ரீ அழகிய சிங்கப்பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் திவ்ய அலங்காரத்தில் எழுந்தருளினார். பின்னர் தூப தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.



 

பக்தர்களுக்கு தீர்த்தம் பிரசாதம் வழங்கப்பட்டது. ஆடி மாத ஏகாதசி என்பதால் வழக்கத்தை விட அதிகளவு பக்தர்கள் பெருமாளை தரிசித்து விட்டு சென்றனர். இதேபோன்று காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு முக்கிய கோவில்களில் ஆடி மாத ஏகாதசி விழா சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு பெருமாள் கோவில்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து   சாமி தரிசனம் மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

 



ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண