ஸ்ரீ மூலஸ்தம்மன் ஆலயம் ஆடி மாத திருவிழாவையொட்டி 28 கைகளுடன் 3 டன் சிம்லா ஆப்பிள்கள் கொண்டு, மூலஸ்தம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

 

காஞ்சிபுரம் ( Kanchipuram News ) : ஆடி மாதம் என்றாலே அம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகங்கள் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். ஆடி மாதத்தில் சிவனை விட அம்மனுக்கு அதிக விழாக்கள் நடைபெறும். குறிப்பாக கிராம தேவதைகள், சிறு கடவுள்களில் கோவில்களில் ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைப்பது, கூழ்வார்த்தல் உள்ளிட்ட பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும். அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆடி பிறந்ததில் இருந்து பல்வேறு கோவில்களில் சிறப்பு அபிஷேகங்கள் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.



 

 

ஸ்ரீ மூலஸ்தம்மன் ஆலயம் 

 

அதன் ஒரு பகுதியாக, காஞ்சிபுரம் அடுத்த முத்தியால்பேட்டை பகுதியில் உள்ள ஸ்ரீ மூலஸ்தம்மன் ஆலயம் கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாத திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்தாண்டு 23-ஆம் ஆண்டு ஆடி மாத  திருவிழாவை ஒட்டி ஸ்ரீ மூலஸ்தம்மன் ஆலயம் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனையும் நடைபெற்றது.



28 கைகளுடன் வீதி உலா

 

இரவு திருவீதி உலாவிற்கு சிம்லாவில் இருந்து ரயில் மூலம் கொண்டுவரபட்ட 3 டன் எடையுள்ள 3000 ஆப்பிள் பழங்களால் 20 அடி மாலையும், தோரணமாக தொங்கவிட்டபடி சிறப்பு அலங்காரத்தில் ஶ்ரீ மூலஸ்தம்மன் அம்மன் திருக்கோவிலில் 28 கைகளுடன் காட்சியளித்தார். பல்வேறு மலர் மாலைகளில் அலங்கரிக்கப்பட்ட அம்மனை பக்தர்கள் வழிபட, சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.



தொடர் வாண வேடிக்கைகள்

 

திருவீதி விழாவின் முன்பு 30 நிமிடம் தொடர் வாண வேடிக்கையுடன், பேண்ட் வாதியங்களுடன் ஸ்ரீமூலஸ்தம்மனுக்கு கோலாகலமாக திருவீதி உலா நடைபெற்றது. திருவீதி உலாவில் பல தெருக்களின் வழியாக, உற்சவ அம்மன் சிலை வலம் வந்தபோது, வழியெங்கும் பக்தர்கள் தீபாராதனை செய்து வழிபட்டனர்.

 



ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண