ஆதி காமாட்சி அம்மன் என அழைக்கப்படும், ஆதிபீட பரமேஸ்வரி காளிகாம்பாள் கோயில் காஞ்சிபுரம் குமரக்கோட்டம் கோயிலுக்கும், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்கும் இடையே அமைந்துள்ளது. அசுரர்கள் தேவர்களுக்கு தொந்தரவு கொடுத்து வந்தனர். இதனால் அசுரர்களிடமிருந்து தங்களை காப்பாற்ற வேண்டும் என பூலோகம் வந்து, அம்பிகையை வேண்டி தவம் இருந்தனர். அசுரர்களை அழிக்க அம்பிகை காளி வடிவம் கொண்டதால், இந்த கோயிலுக்கு காளி கோட்டம் என்ற பெயரும் உண்டு . 


ஆதிபீட பரமேஸ்வரி காளிகாம்பாள் கோயில்



பண்டன் என்ற அசுரனை சிறுமி வடிவம் கொண்டு, அம்பிகை அழைத்த பிறகு தேவர்களுக்கு காஞ்சிபுரத்தில் எழுந்தருளி காட்சியளித்தார். கருணை கொண்ட கடவுள் என்பதால் காமாட்சி என பெயர் பெற்றார். இக்கோயிலில் நுழைவு வாயிலில் ஐந்து நிலை கோபுரம் கம்பீரமாக காட்சியளிக்கிறது. இக்கோயிலில் ஊஞ்சல் மண்டபமும் கொடி மரமும் அமைந்துள்ளது ‌. கருவறை அருகே உள்ள ஸ்ரீ சர்க்கரை இயந்திரத்திற்கு நாள் தோறும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்ற வருகிறது. அம்மன் கோயில் என்பதால் துவார பாலகிகள் பாதுகாப்பிற்கு இருக்கும் சிற்பங்களும் காட்சியளிக்கின்றன .


கோயில் சிறப்பு அம்சம்



இக்கோயில் விஷ்வகர்மா சமுதாய மக்கள் அதற்காக போற்றப்பட்டு வருகிறது. இக்கோயில் அருகே கம்பளத்தெரு அமைந்துள்ளது. அதேபோன்று கோவில் வளாகத்தில் ஸ்ரீ விஷ்வகர்மா, ஸ்ரீ காயத்ரி, ஆதிசங்கர ஆகியோருக்கு தனி சன்னதிகளும் அமைந்துள்ளன. கோயிலில் சிவலிங்கத்தில் பானம் எனப்படும் ருத்ர பாகத்தில் இறைவியின் அமர்ந்த கோலமும் காணப்படுவது சிறப்பம்சமாகும். அம்பாள் தனது கரங்களில் உடுக்கை,  சூலம் , கபாலம் ஆகியவற்றை தாங்கிக் காய்ச்சியிருக்கிறார். பிற கோவில்களில் இது போன்ற வடிவில் காணக் கிடைக்காதது சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது. இந்த வடிவை சக்தி லிங்கம் என அழைக்கின்றனர்.


முக்கிய திருவிழா


பௌர்ணமி நாளன்று நடைபெறும் பௌர்ணமி பூஜை மிக முக்கிய விழாக்களின் ஒன்றாக பார்க்கப்படுகிறது. பௌர்ணமி நாளன்று இரவில் அம்மனுக்கு விசேஷ பூஜைகள் நடைபெறும்.  அதேபோன்று பக்தர்கள் செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் பால் அபிஷேகம் செய்து, தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். நவராத்திரி விழா 13 நாள் இக்கோயிலில் கொண்டாடப்படுகிறது.  நவராத்திரி விழாவின் போது முதல் ஒன்பது நாட்கள் அம்பிகை ஒவ்வொரு அலங்காரத்தில் காட்சி தருவார்.  நவராத்திரி விழாவில் பதினோராம் நாளில் அம்பிகை சந்தன காப்பிட்டு கடைசி நாள் அன்று அம்பிகை புஷ்ப பல்லாக்கு புறப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.  நவராத்திரி விழா ஆதி காமாட்சி அம்மன் கோவிலில் மிக முக்கிய விழாக்களில் ஒன்றாக கருதப்படுகிறது


அர்த்தநாரீஸ்வர லிங்கம்



இந்த லிங்கத்திற்கு சக்தி லிங்கம் என்று அழைக்கப்படுகிறது. திருமணம் தடை நீங்க விரும்புபவர்கள் வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் சக்தி லிங்கத்திற்கும் ஆதி காமாட்சி விளக்கும் அபிஷேகம் செய்தால்,  விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. பிரிந்து தம்பதிகள் மீண்டும் இணையவும் திருமணமானவர்கள் ஒற்றுமையாக வாழவும் சக்தி லிங்கத்திற்கு இனிப்பு நெய்வேதியும்,  செய்து வணங்கலாம்.


கோயில் கும்பாபிஷேகம் 


காஞ்சிபுரம் அருள்மிகு ஆதி காமாட்சி அருள்மிகு ஆதி பீட பரமேஸ்வரி காளிகாம்பாள் திருக்கோயில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது. புனரமைப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் வருகின்ற வைகாசி மாதம் 30 ஆம் நாள் ( ஜூன் 12ஆம் தேதி ) புதன்கிழமை திருகுடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. காலை 6 மணிக்கு கலசம் புறப்பட்டு ஆறு முப்பது மணி அளவில் கோபுர விமான குடமுழக்கு விழா நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து பரிவார சன்னதிகளுக்கு குடமுழுக்கு விழாவும், காலை 11 மணியளவில் மகா அபிஷேகமும் நடைபெற உள்ளது. மாலை 7 மணி அளவில் ஸ்ரீ காமாட்சி சிம்மவாகனத்தில் புறப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்