காஞ்சிபுரம் அடுத்த பெருநகர் அருகே கூழமந்தல் கிராமத்தில் 1000 ஆண்டுக்கு முன்பு அருள்மிகு ஸ்ரீ விசாலாட்சி உடனுரை ஸ்ரீ கங்கைகொண்ட சோழீஸ்வரர் ஆலயத்தில் இன்று வெகு விமரிசையாக நடைபெற்ற மஹா கும்பாபிசேகம் விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் வட்டம் பெருநகர் அருகே கூழமந்தல் கிராமத்தில் 1000 ஆண்டுகளுக்கு முன்பு முதலாம் ராஜேந்திர சோழ காலத்தில் கட்டப்பட்ட அருள்மிகு ஸ்ரீ விசாலாட்சி உடனுறை கங்கைகொண்ட சோழீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பல நூறு ஆண்டுகளுக்காக இன்று மஹா கும்பாபிஷேகம் விழாவனது வெகு விமரிசையாக நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவையொட்டி கோவில் வளகத்தில் யாக சாலை அமைக்கப்பட்டு ஈஸ்வரர் பூஜை, கோ பூஜை, லஷ்மி ஹோமம, நவக்கிரக ஹோமம், விசேஷ திரவ்ய ஹோமம் பூர்ணாஹதி நடைபெற்றது. இன்று காலை கஜ பூஜை, அஸ்வ பூஜைகள் செய்து மஹா பூர்ணாஹதி தீபாரதனைகள் நடைபெற்று சிவாச்சாரியார் சக்தி உபாசகர், மேளத்தாளங்கள் முழங்க அதிர் வேட்டுகள் வெடி வெடிக்க யாக சாலையில் இருந்து கலசங்கள் புறப்பாடாகி அதன் பின் ராஜ கோபுரம், விமானங்களுக்கு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகமானது வெகு விமரிசையாக நடைபெற்றது.
அதன்பின் அருள்மிகு ஸ்ரீ விசாலாட்சி உடனுறை ஸ்ரீ கங்கைகொண்டான் சோளீஸ்வரர் சாமிக்கு சிறப்பு தீப தூப தீபாராதனைகளும், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக பெரு விழாவை காண கூழமாந்தல் மற்றும் அதன் சுற்று வட்டார கிராம பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்திற்கு சிவ மேளதாளங்களுடன் வெகு விமரிசையாக நடைபெற்றது. மேலும் வந்திருந்த அனைவருக்கும் அருட் பிரசாதங்களும், அன்னதானங்களும் வழங்கப்பட்டது. மஹா கும்பாபிஷேக பெரு விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விழா குழுவினர் வெகு சிறப்பாக நடைபெற்றது.