காமிகா ஏகாதசி வரும் ஜூலை 12ஆம் தேதி தொடங்குகிறது. 


ஷ்ராவண மாதத்தில் கிருஷ்ண பஷத்தின் ஏகாதசி திதியில் காமிகா ஏகாதசி அனுசரிக்கப்படுகிறது. காமிகா ஏகாதசி நாளில் பக்தர்கள் விரதமிருந்து விஷ்ணுவை வழிபடுகின்றனர். இது சாதுர்மாஸ் காலத்தின் இரண்டாவது ஏகாதசி விரதமும் ஷ்ரவண மாதத்தின் முதல் ஏகாதசி விரதமும் ஆகும். காமிகா ஏகாதசியின் தேதி, விஷ்ணு பூஜைக்கான நல்ல நேரம் மற்றும் விரத்தை தொடங்கும் நேரம் ஆகியவற்றைப் பார்க்கலாம். 


இந்து காலண்டர் படி, ஷ்ரவண மாதத்தின் கிருஷ்ண பஷத்தின் ஏகாதசி திதி ஜூலை 12-ஆம் தேதி புதன்கிழமை மாலை 5:59 மணிக்கு தொடங்குகிறது. இந்த திதி அடுத்த நாள் (ஜூலை 13) வியாழன் மாலை 5:59 மணி வரை செல்லுபடியாகும். சூரிய உதய நேரங்களின் அடிப்படையில் காமிகா ஏகாதசி ஜூலை 13ஆம் தேதி கடைபிடிக்கப்படும். இந்த நாளில் காலை 5:32 முதல் 7:16 வரை பூஜை செய்ய உகந்த நேரம். மேலும் காலை 10:43 மணி முதல் மாலை 3:45 மணி வரையும் சுபநேரம் ஆகும். இந்த நேரங்களில் அவர் அவர் வசதிக்கேற்ப பூஜை செய்யலாம். காமிக்கா ஏகாதசி விரதத்தை ஜூலை 14ஆம் தேதி முடிக்கலாம். 14ஆம் தேதி காலை 5:32 மணி முதல் 8:18 வரை விரதத்தை முடிக்கலாம் என கூறப்படுகிறது


காமிகா ஏகாதசியின் முக்கியத்துவம் 


புராணக் கதையின்படி, “ஒரு சமயம், யுதிஷ்டிரர் ஸ்ரீ கிருஷ்ணரிடமிருந்து ஷ்ரவண ஏகாதசியைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றும், பின்னர் ஸ்ரீ கிருஷ்ணர் அவரிடம் கூறியதாக சொல்லப்படுவது என்னவெனில்,  ”காமிகா ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள் தனது அனைத்து பாவங்களிலிருந்தும் முக்தி பெறுகிறார்கள். காமிக ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடிப்பவர் புனிதநீரில் நீராடிய புண்ணியத்தைப் பெறுகிறார். மற்றொரு கதை காமிகா ஏகாதசியின் மகத்துவத்தை உணர்த்துகிறது. ஒருமுறை ஜமீன்தார் ஒருவர் பிராமணருடன் சண்டையிட்டு தற்செயலாக அவரைக் கொன்று விட்டார். பின்னர், பிராமணனைக் கொன்றதால் தனக்கு ஏற்பட்ட பாவத்தைப் போக்க முனிவரை அணுகினார். காமிகா ஏகாதசி அன்று விரதம் இருந்து விஷ்ணுவை வழிபடுமாறு முனிவர் அறிவுறுத்தினார். அன்றிரவு, இறைவன் அவரது கனவில் தோன்றி, அவரது பாவங்களை நீக்கினார்”. இவ்வாறு கிருஷ்ணர் கூறியதாக நம்பப்படுகிறது. 


மேலும் படிக்க 


WB Polls: மேற்குவங்கத்தில் தொடரும் மரணங்கள்.. அடுத்தடுத்த வன்முறையால் 26 பேர் பலி.. உள்ளாட்சி தேர்தலுக்கே இப்படியா?


FIR - DIG Vijayakumar : ’இதை எப்படி பயன்படுத்துவது..’ : தனிப்பாதுகாப்பு காவலரின் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட டி.ஐ.ஜி.. வெளியான பரபரப்பு தகவல்கள்