தென் தமிழகத்தில் அருள்மிகு ஸ்ரீ அலங்கார வள்ளி, ஸ்ரீ சௌந்தரநாயகி சமேத ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் மார்கழி மாத ஆருத்ரா  தரிசனத்தை  நாள்தோறும் சிறப்பு அபிஷேக மற்றும் ஆராதனை நடைபெற்று வருகிறது.





தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்கார வள்ளி, ஸ்ரீ சௌந்தரநாயகி சமேத ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் மார்கழி மாத ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நாள்தோறும் சிறப்பு அபிஷேக மற்றும் ஆராதனை நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் இன்று ஆலய மண்டபத்தில் சுவாமி ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர், ஸ்ரீ அலங்காரவல்லி, சௌந்தர் நாயுடன் காட்சியளித்தார்.


 




அதைத்தொடர்ந்து ஆலயத்தின் சிவாச்சாரியார்கள் பிரத்தியேக யாக குண்டங்கள் அமைத்து யாக வேள்வி நடத்தினர். தொடர்ந்து கூடியிருந்த பக்தர்கள் முன்னிலையில் கல்யாண பசுபதீஸ்வரர், அலங்காரவல்லி, சௌந்தரநாயகி அம்பிகைக்கு திருக்கல்யாணம் மேல தாளங்கள் முழங்க நடைபெற்றது. அதை தொடர்ந்து மாலை மாற்றும் நிகழ்ச்சியும் பால், பழம் வழங்கும் நிகழ்ச்சியும் மொய் வைக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர் அனைத்து பக்தர்களும் வரிசையில் நின்றபடி கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கல்யாண வடிவ நிகழ்ச்சியை கண்டு களித்தனர். தொடர்ந்து அனைவருக்கும் மஞ்சள் கயிறு, பட்டாடை உள்ளிட்ட பிரசாதங்களை வழங்கி சிறப்பித்தனர். 




நிகழ்ச்சியின் ஏற்பாட்டை அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய செயல் அலுவலர் மற்றும் நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர். கரூர் ஸ்ரீ அலங்காரவல்லி, சௌந்தரநாயாகி சமேத ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற மார்கழி மாத ஆதுரா தரிசன திருக்கல்யாண வைபோ நிகழ்ச்சியை காண கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலய வருகை தந்து ஓம் நமச்சிவாயா என்ற கோஷத்துடன் நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.




கரூர் மாவட்டம் குளித்தலை கடம்பனேஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை ஒட்டி கடந்த 28ஆம் தேதி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.


இதை அடுத்து திருவம்பாவை உற்சவத்தை ஒட்டி மாணிக்கவாசருக்கு தினந்தோறும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. நடராஜர் முன்பு மாணிக்கவாசகர் இயற்றிய பாடிய 21 திருவம்பாவை பாடல்கள் தினந்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் கோவிலில் பாடப்பட்டது. அதுபோல் கோவில் இருந்து காலை மாலை நேரங்களில் மாணிக்கவாசகரின் திருவீதி உலா நடைபெற்றது. கோவிலை சுற்றியுள்ள நான்கு வீதிகளிலும் வீதி உலா நடந்த போதும் திருவம்பாவை பாடல் பாடப்பட்டது.


அப்போது பொதுமக்கள் சோம ஸ்கந்தரின் ஊஞ்சல் உற்சவம் இரவு நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து பிச்சாண்டவர் நந்தவனம் அளித்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஆருத்ரா தரிசனமான நாளை சிவகாமி அம்பாள் சமேத நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் சாமியின் ஆருத்ரா தரிசனம் பின்னர் வீதி உலாவும் நடைபெற உள்ளது. இதேபோல குளித்தலை அருகே சிவாலயத்தில் உள்ள பெரியநாயகி உடனிறை சிவபுரீஸ்வரர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழாவையொட்டி இரவு மாணிக்கவாசகர் புறப்பாடு, சந்திரசேகரர் சாமி நூறு கால் மண்டபத்தில் ஊஞ்சல் நிகழ்ச்சியும் பிச்சாடன மூர்த்தி நந்தவனம் அளித்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.