திருவோணத் திருநாள் நாளை (செப்.8) கொண்டாடப்படுகிறது. கேரள மக்கள் மகாபலியை வரவேற்க வாசலில் அத்தப்பூ கோலமிட்டு அதில் விளக்கேற்றி ஆடிப்பாடி விதவிதமாக உணவு சமைத்து கொண்டாடுவர். ஓணம் பண்டிகை 10 நாட்கள் கொண்டாடப்படும். அத்தம் நாளில் இது தொடங்கியது. அதாவது ஆகஸ்ட் 30ல் தொடங்கியது. அன்றிலிருந்து நாளை 10வது நாள் திருவோணத் திருநாள். இதுதான் ஓணம் பண்டிகையின் நிறைவு நாள். இந்த நாளைத் தான் கேரள மக்கள் வெகு விமர்சியைகாகக் கொண்டாடுவர்.


கடந்த இரண்டு ஆண்டுகளக, கொரோனா ஊரடங்குகளால் ஓணம் பண்டிகை வழக்கமான உற்சாகத்தை இழந்திருந்தது. ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்று கட்டுக்குள் இருக்கும் சூழலில் இந்த ஆண்டு விழா களை கட்டியுள்ளது. 


உங்களுக்கு மலையாளக் கரையோரத்தில் நிறைய நட்புகள் இருந்தால் வாழ்த்து சொல்ல சில வாக்கியங்கள்..


1. இந்த ஓணம் பண்டிகையில் மகிழ்ச்சி நிறையட்டும்.
2. அனைவருக்கும் ஓணம் நல்வாழ்த்துகள். ஓணம் நன்னாளில் எல்லா நன்மைகளும் வந்து சேரட்டும்.
3. இந்த ஓணம் நன்னாள் நல்ல வளத்தையும், மகிழ்ச்சியையும் கொண்டு வந்து சேர்க்கட்டும்.
4. ஓணம் நன்னாளில் இறைவனை நாடுவோம். எல்லா வளங்களும் வந்து சேரும்.
5. கேரள மக்கள் அனைவருக்கும் ஓணம் நல்வாழ்த்துகள். வளமும், நலமும் சூழட்டும்.
6. வீடுகள் வண்ணப் பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. ஓணம் பண்டிகை மன மகிழ்ச்சியையும், மன நிறைவையும் தரட்டும்.
7. ஓணம் நன்னாளின் மகிழ்ச்சியும், மங்காத ஒளியும் வீட்டில் நிறையட்டும். ஓணம் பண்டிகைக்கு நல்வாழ்த்துகள்.
8. ஓணம் பண்டிகை வாழ்க்கையில் நம்பிக்கையை சேர்க்கட்டும்.
9. காற்றில் மகிழ்ச்சியும், வீடுகளில் வண்ணமும் சேர்ந்துள்ளது. ஓணம் பண்டிகை மனங்களில் நிறைவை தரும்.
10. இந்த ஓணம் பண்டிகை நாளில் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.


 




 








 








ஓணம் சத்யாவில் 12 க்கும் மேற்பட்ட உணவு வகைகள் சமைக்கப்படும். மேலும், சிலர் 26 அல்லது அதற்கும் மேற்பட்ட உணவு வகைகளையும் கூட சமைத்து விருந்தளிப்பர். விருந்தின் சிறப்பம்சமே, வாழை இலையில் உணவு பரிமாறப்படுவது தான். அதாவது, இந்த சிறப்பு நாளில், சத்து நிறைந்த ஆகாரத்தின் மூலம் உடலுக்கு ஊட்டமளிப்பது தான் முக்கியத்துவம்.இதனால், சீரான செரிமானம் முதல் இரத்த ஓட்டம் மேம்படும். 


ஓணம் சத்யா விருந்தில், சர்க்கரப் புரட்டி, கூட்டு, கிச்சடி, பச்சடி, இஞ்சிப்புளி, மாங்காய் கறி, நாரங்கா கறி, பச்சடி, அவியல், ஓலன், ரசம், மோர், எரிசேரி, மிளகாய் அவியல், பரங்கிக்காய், சாம்பார், கிச்சடி, ரசம், கூட்டுக்கறி, நெய், இஞ்சி தயிர், பூவன் பழம் போன்ற விதவிதமான உணவு வகைகள் இடம் பெற்று இந்த திருவோணத்தினை சிறப்பிக்கும்.