Vinayagar Chathurthi 2022 : இதோ வருகிறது விநாயக சதுர்த்தி.. வீட்டை அலங்கரிக்க சில ஐடியாக்கள் இதோ..

வீட்டில் இருக்கக்கூடிய எளிமையான பொருட்களைக் கொண்டு அலங்காரம் செய்வது எளிதானது மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்புடையதாகும்.

Continues below advertisement

இந்த வருடம் விநாயக சதுர்த்தியை கொண்டாட, எல்லோரும் பல்வேறு  விதங்களில் விநாயகரை அலங்காரம்  செய்வதற்கு தயாராகி வருவீர்கள். வீட்டிலேயே அலங்காரங்கள் செய்வது எளிதானது. மட்டுமல்லாமல் நமது சூழலுக்கும் ஏற்றது. எனவே, பாரம்பரிய நடைமுறை மற்றும் பலூன்களால் அலங்கரிப்பதற்கு பதிலாக, ஏன் வீட்டில் வித்தியாசமாக ஏதாவது செய்யக்கூடாது?

Continues below advertisement

 விநாயகர் சதுர்த்தி விழா, இந்தியாவில் உள்ள இந்து மத மக்களால் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் திருவிழாவாகும். இந்த 11 நாள் திருவிழாவை மக்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர். இந்த விநாயகர் சதுர்த்தி, விநாயகப் பெருமானின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு விநாயக சதுர்த்தி கொண்டாட்டங்கள் ஆகஸ்ட் 31 ஆம் தேதி தொடங்கி,செப்டம்பர் 9-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தியை முறைப்படி நாம் கடைப்பிடித்து வழிபடுவது, அவரை நமது  வீட்டிற்குள் வரவேற்கும் முறையாகும்.
விநாயகர் சதுர்த்தி திருவிழா துவங்குவதற்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில்,வீடுகளை எவ்வாறு,சிறப்பாக அலங்கரிக்கலாம் என்று பார்க்கலாம். வீட்டு அலங்காரத்திற்கான இந்த குறிப்புகள் மூலம் உங்கள் விநாயக சதுர்த்தி கொண்டாட்டங்களை மிகவும் சிறப்பானதாக மாற்றுவதற்கான எளிதான முறைகளை பார்க்கலாம்.

கொரோனா பரவல் தொடங்கி இரண்டு வருடங்களின் பின்னர் மக்கள் தாம் விரும்பியவாறு கட்டுப்பாடுகள் இல்லாமல் சுதந்திரமாக கொண்டாட உள்ளனர். வீட்டில் இருக்கக்கூடிய எளிமையான பொருட்களைக் கொண்டு அலங்காரம் செய்வது எளிதானது மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்புடையதாகும். எனவே, பாரம்பரிய முறை மற்றும் பலூன்களால் அலங்கரிப்பதற்கு பதிலாக, ஏன் வீட்டில் ஏதாவது செய்யக்கூடாது?

 ஒரு பயன்பாட்டில் இல்லாத பேக்கிங் இருக்கு பயன்படும் பேப்பர் அட்டையை கொண்டு அழகான அலங்காரங்களை நம்மால் செய்ய முடியும். அதே அலங்காரத்தை வீட்டிலும் செய்யலாம். முதலில் விநாயகரை வைத்து வழிபடுவதற்கு தகுந்த ஒரு இடத்தை தேர்வு செய்து கொள்ள வேண்டும். அது உங்கள் பூஜை அறையாக கூட இருக்கலாம் அல்லது வேறு எந்த பொது இடமாக கூட இருக்கலாம்.

பொதுவாக எல்லோரது வீடுகளிலும் பூஜையறையை அலங்காரம் செய்து விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவார்கள். பொதுவாக அலங்காரப் பொருட்கள் 
 வெவ்வேறு வடிவங்கள் மற்றும் வடிவமைப்புகளில் கிடைக்கின்றன. வீட்டில் இருக்கும் பூஜை அறை அல்லது  பொதுவான அறையில் கோவிலைகளை போன்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தலாம். முதலில் வண்ண மலர்களால் அலங்கரிக்கவும், வண்ணமயமான பூக்கள் உங்கள் வீட்டு அலங்காரங்களுக்கு ஒரு துடிப்பான தோற்றத்தை சேர்க்கின்றன. அவை உங்கள் வீட்டிற்கு பண்டிகை உணர்வை சேர்க்கின்றன.

மேலும் நீங்கள் அவற்றை வித்தியாசமான தோற்றத்திற்காக ஆக்கப்பூர்வமாக  வித விதமான வகை தோற்றங்களில் தயார் செய்யலாம். விநாயகர் சிலையின் மீது மலர் தோரணத்தை வைத்து விட்டு மீதியை பாதத்தில் வைத்து அலங்காரம் செய்யலாம். உங்கள் வீட்டின் நுழைவாயிலில் வெவ்வேறு வண்ண மலர் இதழ்களைக் கொண்டு கலர் கோலங்களை வரைந்து அழகு சேர்க்கலாம். அலங்கரிக்கும் மெழுகுவர்த்திகள், வண்ண விளக்குகள் மற்றும் சர விளக்குகளைப் பயன்படுத்தி கண்ணுக்கு இனிமையான ஒளி அமைப்பை ஏற்படுத்தலாம்.

விநாயக சதுர்த்தி அன்று விளக்குகள் அலங்காரத்தின் மிக முக்கியமான பகுதியாகும். உங்கள் வீட்டை ஒளிரச் செய்ய, நீங்கள் மெழுகுவர்த்திகள், வண்ண மின் விளக்குகள் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். அவற்றை உங்களின் வீட்டில் விநாயகர் சிலை வைத்துள்ள இடத்தை சுற்றி வைக்கலாம். பூஜை அறையை காமாட்சி அம்மன் விளக்கு மற்றும் விதவிதமான விளக்கு சரங்களால் அலங்கரிப்பது உங்கள் அலங்காரத்தை பிரகாசமாக்கும். வண்ணமயமான ஒளியைச் சேர்ப்பது அறையை மேலும் அழகானதாகவும் கண்களுக்கு குளிர்ச்சியானதாகவும் மாற்றும்.

மேலும் வண்ண மலர்கள், இயற்கையான அருகம்புல் மாலைகள் இன்னும் பல அலங்காரப் பொருட்கள் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு மெருகூட்டும்.

Continues below advertisement